- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநோய்கள் தீர ராமர் வழிபாடு

நோய்கள் தீர ராமர் வழிபாடு

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அந்த செல்வங்களை அனுபவிப்பதற்கு ஆரோக்கியமான உடல் என்பது கண்டிப்பாக வேண்டும். அதிக அளவில் சம்பளம் வாங்கி அதைவிட அதிக அளவு மருத்துவமனைக்கு செலவு செய்து கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எவ்வளவு செலவு செய்தாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி நோயின் தாக்கம் அதிகமாக இருப்பவர்களும் நோயற்ற நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் ராமபிரானை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நோய்கள் நீங்க ராமர் வழிபாடு

இந்த வழிபாட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை புதன்கிழமை தோறும் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு ராமர் பட்டாபிஷேக படம் வேண்டும். அடுத்ததாக ராமர் பாதம் வேண்டும். ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து அதற்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் ராமரின் பாதத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ராமபிரானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக பன்னீர் ரோஜா, மல்லிகைப்பூ, பிச்சிப்பூ இந்த பூக்களை உதிரிப்பூக்களாக வாங்கு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பூக்களை தவிர்த்து வேறு எந்த பூக்களையும் உபயோகப்படுத்தக் கூடாது.

இந்த பூக்களை உங்களுடைய கையில் வைத்துக் கொண்டு ராமா ராமா என்று 108 முறை கூறி அந்த மலர்களால் ராமரின் பாதத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்துவிட்டு நோய் நொடிகள் அற்ற நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று ராமபிரானிடம் வேண்டிக் கொண்டு அந்த ராமர் பாதத்தை எடுத்து உங்களுடைய தலையின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரண்டு நிமிடம் தலையில் வைத்து விட்டு பிறகு திரும்பவும் ராமர் பாதத்தை அதை தட்டிலேயே வைத்து விடுங்கள். பிறகு தரையில் விழுந்து வணங்கி நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு புதன்கிழமையும் நாம் ராமபிரானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.

முக்கியமான குறிப்பு இந்த வழிபாட்டை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் ராமரின் பட்டாபிஷேக படத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ராமர் பாதத்தையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ராமர் பாதம் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி பித்தளை போன்ற மற்ற உலோகங்களில் செய்யப்பட்டு இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ராமர் பாதம் என்பது கண்டிப்பாக வேண்டும்.

- Advertisement -

இத்தனை வாரங்கள் என்று கணக்கு வைத்து இந்த வழிபாட்டை செய்யாமல் ஒவ்வொரு வாரமும் இந்த வழிபாட்டை செய்து வருவதன் மூலம் ராமபிரானின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு மட்டுமல்லாமல் இராம நாமத்தை உச்சரிக்கும் இடத்தில் ஆஞ்சநேயரும் வீற்றிருப்பார் என்பதால் ஆஞ்சநேயரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்கும் செடி

மிகவும் எளிமையான இந்த ராமர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் விருப்பப்பட்டு செய்பவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித நோய்களும் அணுகாது, ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்