சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.

chardurthi valipadu
- Advertisement -

முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டால் எந்தவித தடைகளும் தடங்கல்களும் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

மாதத்தின் முதல் நாள் அன்று விடியற் காலையில் எழுந்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். அதனால் தான் பலரும் மாதத்தின் முதல் நாள் அன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்வார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய கிழமையாக புதன்கிழமை தான் திகழ்கிறது. அப்படிப்பட்ட புதன்கிழமை அன்று மாதத்தின் முதல் நாளும் சேர்ந்து வந்து அதே சமயம் சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருவதால் பல அற்புதமான பலன்களை தரப் போகிறது.

- Advertisement -

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் ஆலயத்திற்கு சென்று மாலை நேரத்தில் நடக்கும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு நம்மால் இயன்ற அளவு அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து வருவதன் மூலம் விநாயகப் பெருமான் நல்ல வழியை காட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் ஆலயத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பூஜைகளை மேற்கொண்டு வழிபாடு செய்வார்கள். எப்படி செய்தாலும் முழு மனதோடு விநாயகப் பெருமானை வழிபட்டால் அவரின் அருளால் நமக்கு நன்மைகளை நடக்கும் என்பது உறுதி.

நாளைய தினம் விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கற்பூர தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் விநாயகர் படம் இருந்தால் அதை சுத்தமாக துடைத்து சந்தனம் மஞ்சள் குங்குமம் போன்றவற்றை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். விநாயகர் சிலை இருப்பவர்கள் சுத்தமான பசும்பாலால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யலாம். அன்றைய தினம் சிவப்பு நிற மலர்கள், அருகம்புல் மற்றும் எருக்கம் பூவை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

நெய்வேத்தியமாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பிரசாதங்களை படைக்க வேண்டும். கருப்பு சுண்டல், சர்க்கரை பொங்கல் செய்யலாம். இயலாதவர்கள் பேரிச்சம் பழத்தின், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை கூட படைக்கலாம். கொழுக்கட்டையும் செய்து படைக்கலாம். ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அதை சிவப்பு நிற துணியில் வைத்து அதனுடன் ஒரு அருகம்புலையும் வைத்து என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அதை முடிச்சு போட்டு விநாயகப் பெருமானின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.

சுத்தமான அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி பஞ்சுத்திரி அல்லது சிவப்பு திரி பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் போது சங்கடஹர கணபதி மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம்:
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வ சங்கடம் நிவாராய நிவாராய ஹீம் பட் ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை கூறி 27 முறை அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.

மறுநாள் முடிந்து வைத்திருக்கும் ஒரு ரூபாயை அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்து உண்டியலில் சேர்த்து விட வேண்டும்

- Advertisement -