- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகப்பொலிவை தரும் சந்தனம்

முகப்பொலிவை தரும் சந்தனம்

- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்களின் முகத்தை பொலிவுடன் பிரகாசமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி பொலிவுடனும் பிரகாசத்துடனும் வைத்துக் கொள்வதற்கு கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய மிகவும் அற்புதமான பொருட்கள் பல இருக்கின்றன. அந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படும் சந்தனத்தை எந்த முறையில் நாம் பயன்படுத்தினால் நம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவுடன் திகழும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்க போகிறோம்.

முகம் பொலிவுடன் திகழ வேண்டும் என்றால் முகத்தில் அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணெய் பசை குறைய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும் உதிர வேண்டும். இது மட்டும் போதுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கினால் தான் முகம் பொலிவுடன் பிரகாசத்துடனும் திகழும். இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய மிகவும் அற்புதமான பொருளாக திகழ்வதுதான் சந்தனம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு சுத்தமான சந்தனத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். சந்தன பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டியும் சேர்த்து இவை இரண்டையும் நன்றாக கலப்பதற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது முகத்தை நன்றாக சுத்தமாக கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பிறகு கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு மாய்ஸ்ரைசரை முகத்தில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதற்கு சந்தன உபயோகப்படும் என்பதால் முக வறட்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

- Advertisement -

அதனால் விட்டமின் இ கேப்சூல் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய், கேரட் எண்ணெய் போன்றவற்றை முகத்தில் தடவலாம். வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் முகம் மிகவும் பிரகாசமாகவும் பொலிவுடன் இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் பகலில் நாம் எந்த கெமிக்கல் நிறைந்த கிரீமை பயன்படுத்தினாலும் இரவில் முகத்தை கழுவி விட்டு சந்தனத்தை முகத்தில் தடவுவதன் மூலம் அந்த கிரீமால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: முடி அசுர வேகத்தில் வளர உதவும் அரிசி தண்ணீர்

மிகவும் அற்புதமான இந்த ஃபேஸ் பேக்கை சுத்தமான சந்தனத்தை பயன்படுத்தி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சற்று முன்