நம்முடைய தலை முடிக்கு அதிக அளவு போஷாக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்குரிய பொருட்களை நாம் உணவாகவோ அல்லது முடிக்கு ஹேர் மாஸ்காகவோ பயன்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை நாம் தந்தால் தான் முடி நன்றாக ஆரோக்கியமாக வளரும். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி ஊற வைத்த தண்ணீரை எந்த முறையில் பயன்படுத்தினால் முடி நன்றாக வளரும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
ஒருவருடைய முடியில் எப்பேர்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் முதலில் நமக்கு வெளிப்படையாக காட்டுவது முடி உதிர்தல் தான். முடி உதிர்தல் ஏற்பட்டு விட்டால் அந்த முடி உதிர்தல் எதனால் ஏற்பட்டது, என்ன பாதிப்பால் ஏற்பட்டது என்பதை உணர்ந்து அந்த பாதிப்பை நாம் நீக்கினால் தான் முடி உதிர்தல் பிரச்சனை என்பது நீங்கும். இந்த முடி உதிர்வை முற்றிலும் நிறுத்தி முடியை வேகமாக வளரச் செய்வதற்கும் சில பொருட்கள் நமக்கு உதவி புரியும். அந்த பொருட்களில் ஒன்றுதான் அரிசி ஊற வைத்த தண்ணீர்.
அரிசியில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அந்த சத்துக்கள் அனைத்துமே அரிசி ஊறவைத்த தண்ணீரிலும் இருக்கும். அந்த தண்ணீரை நம்முடைய தலைக்கு நாம் பயன்படுத்தும் பொழுது அந்த சத்துக்கள் அனைத்தும் நம்முடைய தலைமுடிக்கு வந்து சேரும். சரி இப்பொழுது அரிசி தண்ணீரை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
ஒரு கப் அரிசியை எடுத்து சுத்தமாக கழுவி விட்டு அதில் நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். 12 மணி நேரம் கழித்து அதிலிருந்து நம்முடைய தலைக்கு ஏற்றார் போல் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம்முடைய தலையின் வேர்க்காடுகளிலும் முடி முழுவதும் பயன்படுத்த வேண்டும்.
அப்படியே 20 நிமிடங்கள் விட்டுவிட்டு மையிடு ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இது ஒரு முறை. மற்றொரு முறை நாம் ஊற வைத்திருக்கும் அரிசியில் நம்முடைய தலைமுடிக்கு தேவையான அளவு அரிசியை எடுத்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி வெந்த பிறகு அதை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு கிளாஸ் அளவிற்கு தேங்காய் பாலை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஹேர் பேக் போடுவது போல் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து மையிடான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விட வேண்டும். தலைக்கு குளித்த பிறகு கடைசியாக நாம் ஊறவைத்து மீதம் இருக்கும் தண்ணீரை நம்முடைய தலையில் ஊற்றி அலசி விட வேண்டும். மறுபடியும் திரும்ப நல்ல தண்ணீரை தலையில் ஊற்றக்கூடாது.
இதையும் படிக்கலாமே:இளமையான பிரகாசமான முகத்தை பெற உதவும் ஃபேஸ் பேக்
இப்படி செய்வதன் மூலம் தலைமுடிக்கு தேவையான அனைத்து வித போசாக்கும் கிடைக்கப்பெற்று தலைமுடி அசுர வேகத்தில் வளர ஆரம்பிக்கும்