இத மட்டும் நீங்க செஞ்சா போதும். சந்திராஷ்டம நாட்களில் உங்களை தேடி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

chandran
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினையே முதலில் ‘பயம்’ தான். இந்த நாட்களில் இதை செய்தால், பிரச்சனை வந்துவிடுமோ? இந்த நாள் நல்ல நாளா, அல்லது கெட்ட நாளா? என்று யோசித்து யோசித்து, ஒரு செயலை தொடங்கும் போதே அரைகுறை மனதோடு தொடங்கினால் அந்த வேலை வெற்றியில் முடியுமா? அந்த வரிசையில் நீங்கள், உங்களுக்கு வரக்கூடிய சந்திராஷ்டம தினத்தை எதிர்கொள்ள பயபடுவீர்களா? சிலர், சந்திராஷ்டமம் என்றாலே பயத்தில் நடுங்குவார்கள். தனக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்துவிட்டால் அந்த தினத்தில் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்கவே மாட்டார்கள்.

chandra grahanam

இப்படி மாதத்திற்கு இரண்டரை நாட்கள் வீணாகும். அதன்மூலம் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் தடைபடும். அந்த இரண்டரை நாட்களைக் கூட நாம் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஆன்மீக ரீதியாக ஏதேனும் வழி உண்டா என்று கேட்பவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. இனி சந்திராஷ்டமத்தை நினைத்து யாரும் அஞ்ச வேண்டாம். சாதாரண நாட்கள் போலவே, இந்த சந்திராஷ்டம நாளும் நம்மை கடந்து செல்லும்.

- Advertisement -

சரி, பரிகாரத்தை தெரிந்து கொள்வோம். உங்களுடைய ராசிப்படி உங்களுக்கு எந்த நாள் சந்திராஷ்டமமாக வருகின்றதோ, அன்றைய தினம் உங்களை எப்போதுமே நீங்கள் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கோபப்படக்கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், சந்திராஷ்டம நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்து போய் விடும்.

water-drinking-procedure

நம்மை நாமே குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது? வழக்கத்தைவிட சந்திராஷ்டம நாளில் நிறைய தண்ணீர் பருக வேண்டும். இந்த சந்திராஷ்டம நாளில் காலை நீங்கள் எழுந்து குளிக்கும் போது, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு பச்சரிசி மாவு அல்லது புழுங்கல் அரிசி மாவை கரைத்து விட்டு அதன் பின்பு, அந்த நீரை கொண்டு குளிப்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு ஸ்பூன் அரிசி மாவை முதலில் உங்களது உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு, உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, அந்த மாவை குளிக்கும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீங்கள் குளிக்கும் தண்ணீர் பச்சைத் தண்ணீர் ஆகவும் இருக்கலாம் சுடுதண்ணீர் ஆகவும் இருக்கலாம்.

arisimavu

இந்த தினத்தில் சிவபெருமானுடைய ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். காக்கை குருவிகளுக்கு தானியங்களை இறையாக போடலாம். இப்படி, சந்திராஷ்டமம் வரும் தினங்களில் சின்ன சின்ன பரிகாரங்களை செய்யும் போது, அதற்குண்டான தாக்கங்கள் நிச்சயம் குறைக்கப்படும்.

- Advertisement -

pray

இதோடு சேர்த்து காலை குலதெய்வ வழிபாட்டை செய்யவும் மறந்துவிடாதீர்கள். காலை குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை மனதார உச்சரித்து விட்டு, பூஜையறையில் நமஸ்காரம் செய்வார்களுக்கு வரக்கூடிய எல்லா நாட்களுமே நல்ல நாளாகத்தான் அமையும். மேல் சொல்லப்பட்ட பரிகாரங்களின் மூலம், சந்திராஷ்டம தினங்களில் வரக்கூடிய பிரச்சினைகள் முழுமையாக தடுக்க படுகிறதோ இல்லையோ? அதனுடைய தாக்கம் உங்களுக்கு, பெரிய அளவிலான பாதிப்பை நிச்சயம் கொடுக்காது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெரிந்தோ! தெரியாமலோ! செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட இப்படி செய்து பாருங்கள்! வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், நிம்மதி கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -