தெரிந்தோ! தெரியாமலோ! செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட இப்படி செய்து பாருங்கள்! வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், நிம்மதி கிடைக்கும்.

god-red-banana-flower

தெரிந்தும், தெரியாமலும் நாம் எல்லோருமே பாவங்கள் செய்து வருகிறோம். சிறு ஈ, எறும்பை கொல்வது கூட பாவம் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படியிருக்க நாம் நம்முடைய வாழ்க்கையில் பாவம் என்றே தெரியாமல் எவ்வளவோ தவறுகளை செய்து இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பாவங்களுக்கு எல்லாம் வாழும் காலத்திலேயே தண்டனைகளும் கிடைக்குமாம். நாம் பெரிதாக செய்யும் பாவங்களுக்கு அடுத்த ஜென்மத்திலும், சிறிதாக செய்யும் பாவங்களுக்கு இந்த ஜென்மத்திலேயும் தண்டனை கிடைத்து விடுமாம். இப்படியாக சாஸ்திரங்கள் கூறும் பாவங்களுக்கான பரிகாரம் தான் என்ன? நாம் நிம்மதியாக வாழ என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sad-crying4

வாழும் காலத்திலேயே தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தே சில பாவங்களை செய்து இருப்பார்கள். உதாரணத்திற்கு சிறுவயது முதலே நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் மற்றவர்கள் மேல் பழி சுமத்தி விடுவீர்கள். அதை வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், பெற்றோர்கள் அடித்து விடுவார்களோ என்கிற பயத்திலும், பதட்டத்திலும் செய்து விடுவோம்.

சாஸ்திரப்படி பொய்யே கூறக்கூடாது என்பது நியதி. ஆனால் எத்தனை முறை? எத்தனை விஷயத்திற்காக? நாம் பொய் சொல்லி இருப்போம்? சிறு சிறு விஷயங்களுக்கு கூட சர்வ சாதாரணமாக நம் வாயில் பொய் வந்து விடுகிறது. பொய் தானே! அதில் என்ன இருக்கிறது? என்று நினைத்து விடுகிறோம். அரிச்சந்திர மகாராஜா தன் வாழ்க்கையில் ஒருமுறை கூட பொய் சொல்லக்கூடாது என்று நியாயமாக வாழ்ந்தவர் என்று புராணங்கள் கூறுகிறது. அதற்குரிய பலனையும் இறுதியில் அவர் அனுபவித்தார் என்பது தான் நாம் அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

hari-chandran

எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தாலும் சிறு தீங்கு கூட யாருக்கும் இழைக்காமல், பொய் சொல்லாமல் இருந்தாலே வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம். யாரையும் பாதிக்காத பொய் பொய்யா? என்று கேட்கலாம். யாரையும் பாதிக்காத விட்டாலும், உங்களுடைய மனசாட்சிக்கும், மேலே ஒருவன் பாவக்கணக்கை எழுதிக் கொண்டிருக்கிறானே அவர்களும் அதனை லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதற்குரிய பலாபலனை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

சரி தெரிந்தும், தெரியாமலும் சிறு சிறு தவறுகளையும் செய்திருக்கிறோம். அதனால் உண்டாகக்கூடிய தீவினைகளிலிருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்வது? வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் உள்ள ஏதாவது பழத்தையும், சிவப்பு நிற பூக்களையும் சமர்பித்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த சிறு சிறு பாவங்கள் மன்னிக்கப்படும் என்கிற ஐதீகம் உண்டு. ஒரு குழந்தை தவறு செய்தால் அதனை மன்னிக்கக் கூடிய பரந்த மனம், முதலில் தாய்க்கு தான் வரும். அதனால் அம்மனிடம் பிரார்த்தனை வையுங்கள். உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும். மேலும் அம்மனுடைய துர்க்கை சாலிசா படித்தால் தெரிந்து செய்த பாவங்களுக்கான பரிகாரமாக அமையும்.

durga

செவ்வாய்க்கிழமை அன்று சிறிது முழு உளுத்தம் பருப்பை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த உளுத்தம் பருப்பை மறுநாள் கோமாதாவிற்கு அதாவது பசுவிற்கு கொடுத்து வர வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். நல்லதே நடக்காதா? என்கிற புலம்பலுக்கு முடிவு கிடைக்கும். உங்களுடைய மனக்குறைகள் அத்தனையும் நிச்சயமாக தீரும். இது போன்ற பரிகாரங்கள் மனதிற்கு நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும். நம்பிக்கையோடு செய்து நீங்களும் செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இரவில் செய்யவே கூடாத முக்கியமான 3 விஷயங்கள்? இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம் விரையமாகி கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.