சப்போட்டா பழத்துல அல்வா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லனா இப்போ ட்ரை பண்ணுங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

halwa2
- Advertisement -

எப்போதுமே பழங்களை அதிக அளவில் எடுப்பது உடலுக்கு ஆரோக்கியமானது தான். அந்த வகையில் இந்த சப்போட்டா பழத்தை அனைவருமே சாப்பிடலாம். விலை மலிவான இந்த சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய்யே ஏற்படாது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால் எலும்புகளுக்கு நல்ல தெம்பு தரும். சப்போட்டாவை அதிக அளவில் உண்டு வந்தால் உங்கள் சருமம் பளபளப்புடன் இருக்கும். இது பித்தத்திற்கு நல்ல மருந்து, காச நோய், மூல நோய் போன்றவைகளுக்கெல்லாம் கூட இந்த சப்போட்டா ஒரு அருமருந்து. அது மட்டுமின்றி தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சப்போட்டாவை தினமும் உண்டு வந்தால் அந்த தொந்தரவும் கூட இருக்காது.

இப்படி இத்தனை மருத்துவ குணம் உள்ள சப்போட்டா பழத்தை நல்ல ஆரோக்கியமான முறையில் சர்க்கரை சேர்க்காமல் அனைவரும் உண்ணும் வகையில் ஒரு அல்வா அல்வா ரெசிபியை பற்றிய பதிவு தான் இது.

- Advertisement -

தேவையான பொருட்கள்: சப்போட்டா பழம் – 1/4 கிலோ, முந்திரி – 10, நெய் -2 டேபிள் ஸ்பூன், ரவை – 1/2 கப், வெல்லம் – 1 கப்.

முதலில் சப்போட்டா பழத்தை (நல்ல பழுத்த பழமாக) நன்றாக அலசி மேலே உள்ள தோல் மற்றும் கொட்டைகளை எடுத்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள முந்திரியை போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்து விடுங்கள். அதன் பிறகு அதே கடாய்யில் ரவையை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். ரவை நன்றாக வறுபட்டவுடன் அரை கப் ரவைக்கு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ரவையை கட்டி படாமல் நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

ரவை வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் சப்போட்டா பழ பேஸ்ட்டை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு வெள்ளம், நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். ஒரு பத்து நிமிடம் இப்படி கிளறினாலே போதும் கடாயில் ஒட்டாத அளவிற்கு, ரவை சப்போட்டா வெல்லம் எல்லாம் நன்றாக கலந்து சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து விடும். இதற்கு மேல் வறுத்து வைத்துள்ள முந்திரியை போட்டு இறக்கி விடலாம். அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான முறையில் சப்போட்டா பழ அல்வா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: முளை கட்டிய பச்சை பயறு தோசை மாவு 10 நிமிஷத்தில் இப்படி தயாரித்து காலையில் தோசை சுட்டு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாமே! ஈஸியான பச்சை பயறு தோசை எப்படி சுடனும்?

இதில் நாம் சர்க்கரை சேர்க்கதால் உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கு கூட தாராளமாக இந்த அல்வாவை செய்து தரலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் உடலுக்கும் நன்மை தரும் இந்த சப்போட்டா பழத்தை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இது போன்று வித்தியாசமான முறையில் அல்வா செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -