முளை கட்டிய பச்சை பயறு தோசை மாவு 10 நிமிஷத்தில் இப்படி தயாரித்து காலையில் தோசை சுட்டு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாமே! ஈஸியான பச்சை பயறு தோசை எப்படி சுடனும்?

- Advertisement -

காலையில் எழுந்ததும் தோசை மாவு இல்லையே இட்லி, தோசை எப்படி சுடுவது? என்று புலம்பி தள்ளாமல், உங்கள் உடல் எடையை குறைப்பதில் கவனம் உள்ளவர்களாக இருந்தால், இது போல ஆரோக்கியமான முறையில் வித்தியாசமான தானியங்களை வைத்து தோசை சுட்டுப் பாருங்க, அந்த வகையில் பச்சை பயறு கொண்டு 10 நிமிடத்தில் எப்படி மாவு அரைத்து தோசை சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பச்சை பயறு முளை கட்டுவது எப்படி:
முதலில் ஒரு கப் அளவிற்கு பச்சை பயறை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சுத்தமான தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விட வேண்டும். எட்டு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி பச்சை பயறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளை காட்டன் துணியில் போட்டு காற்று போகும் அளவிற்கு ஒரு ரப்பர் பேண்ட் போட்டு மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள், இறுக்கமாக கட்டக் கூடாது.

- Advertisement -

24 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். எப்போது நீங்கள் மூட்டை கட்டுகிறீர்களோ, அதிலிருந்து மறுநாள் அதே நேரத்தில் 24 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் ஒரு இன்ச் அளவிற்கு நன்கு பச்சைப் பயிறு சூப்பராக முளைவிட்டிருக்கும். மற்ற பயறு வகைகள் முளை கட்டவும் இதே போன்ற முறையை கையாளலாம், ஆனால் கடினமாக இருக்கும் பயிறு வகைகளை முப்பது மணி நேரம் முளை கட்ட விட வேண்டும்.

பச்சை பயிறு தோசை மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பச்சைப் பயிறு – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, இரண்டு பல் – பூண்டு, சிறு துண்டு – இஞ்சி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

பச்சை பயறு தோசை மாவு செய்முறை விளக்கம்:
முளை கட்டிய இந்த பச்சை பயறை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு பூண்டு பற்களை தோலுரித்து சேருங்கள். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாய் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த கல்யாண வீட்டு காய் பொரியலை செஞ்சு பாருங்க. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் உங்க வீட்டில என்ன விசேஷம்னு கேப்பாங்க.

அவ்வளவுதான், முளைகட்டிய பச்சை பயறு தோசை மாவு ரெடி! அஞ்சு நிமிடத்தில் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தோசை மாவு தயார் செய்து விட்டோம். இதை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அப்படியே தோசை கல்லை காய வைத்து, தோசை மாவு போல மெல்லியதாக பரப்பி சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு ரெண்டு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான முளை கட்டிய பச்சைப் பயறு தோசை தயார்! இதை தினமும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபியாக காலையில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் உடல் எடையை கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் கணிசமாக குறைத்து விடலாம்.

- Advertisement -