குட்டிஸ் ஃபேவரிட் சப்போட்டா ஐஸ்க்ரீம் எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

chikoo fruit ice cream
- Advertisement -

ஐஸ்கிரீம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். அதிலும் குழந்தைகளிடம் ஐஸ்கிரீம் என்று சொல்லி விட்டால் போதும் அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஐஸ்கிரீமை இன்னும் கொஞ்சம் ருசியாக அதே நேரத்தில் ஆரோக்கியமாக வீட்டிலே எப்படி தயார் செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சப்போட்டா பழம் – 10
ப்ரஷ் கீரீம் -1/2 கப்
சர்க்கரை -1 கப்
கெட்டியான பால் – 300 ml
பவுடர் -1/2 கப்
நட்ஸ் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப

- Advertisement -

செய்முறை

இந்த ஐஸ்கிரீம் செய்ய முதலில் சப்போட்டாவை நன்றாக சுத்தம் கொள்ளுங்கள். அடுத்து அதன் மேலே உள்ள தோலை உரித்து கொட்டைகளை எடுத்து விட்டு சதை பகுதி மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த சப்போட்டாவை மிக்ஸியில் ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பால், கிரீம், பால் பவுடர், சர்க்கரை, நட்ஸ் அனைத்தையும் சேர்த்து பிளெண்டர் வைத்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களிடம் பிளெண்டர் இல்லையெனில் எனில் பால் பவுடர், கிரீம், சர்க்கரை இவற்றுடன் கொஞ்சமாக பால் ஊற்றி பல்ஸ் மோடில் ஒரு முறை மட்டும் சுற்றி எடுங்கள். இதை மிக்ஸியில் தயார் செய்வதாக இருந்தால் அரைத்த பிறகு நட்ஸ் சேர்த்து மீதமுள்ள பாலில் இவைகளை கலந்து விடுங்கள்.

இந்த கலவையுடன் நாம் ஏற்கனவே மிக்சியில் அரைத்த சப்போட்டா பழ பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சப்போட்டா ஐஸ்கிரீம் தயாராகி விட்டது. இதை நீங்கள் ஐஸ்கிரீம் ட்ரே அல்லது காற்று போகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் கழித்து இந்த கலவையை எடுத்து மிக்ஸி அல்லத பிளென்டரில் ஒரு முறை போட்டு அடித்த பிறகு மீண்டும் இதே டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இந்த ஐஸ் கிரீம் குறைந்தது 3 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் இரண்டில் எடுத்து மீண்டும் ஒரு முறை இதே போல கலந்து விடுங்கள்.

இப்போது இந்த கலவையை மறுபடியும் ப்ரீசரில் வைத்து 8 இருந்து 10 மணி வரை அப்படியே விட்டு விடுங்கள். பத்து மணி நேரம் கழித்து இதை எடுத்துப் பாருங்கள் சுவையான சப்போட்டா ஐஸ்கிரீம் தயார். ஐஸ்கிரீம் என்றாலே எப்பொழுதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சப்போட்டா பழத்தை வைத்து இது போல செய்து கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாத ஸ்பெஷசல் சைவ மீன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கடைகளில் விற்கும் ஐஸ்கிரீம்களை வாங்கி கொடுப்பதை காட்டிலும் இது போல நாமே வீட்டில் ஆரோக்கியமாக தயார் செய்து கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -