உங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி நீங்க இதை செய்தால் பலன் அதிகம்

sarabeswarar

பஞ்சபூதங்களில் நெருப்பு என்பது ஒரு அற்புதமான சக்தியாகும். நெருப்பு மட்டுமே எந்த ஒன்றாலும் மாசு படுத்த முடியாத ஒரு பஞ்சபூத மாதமாக இருக்கிறது. எனவே தான் அக்காலத்தில் இறைவனின் அருளை பெறுவதற்கு யாக குண்டம் அமைத்து, நெருப்பை வளர்த்து, அதில் பல மங்களப் பொருட்களை இட்டு, ஆவீர்பாகமாக தெய்வங்களுக்கு அளித்து வழிபடும் ஹோம பூஜை முறையை உண்டாக்கினர். இந்த ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோம பூஜை வகையாக “சரபேஸ்வரர் ஹோமம் பூஜை” முறை இருக்கிறது. இந்த ஹோம பூஜை முறையால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sarabeswarar 2

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் உக்கிரம் தணியாமல் இருந்தார். அவரின் உக்கிரத்தால் உலகெங்கிலும் உஷ்ணம் அதிகரித்து, உலகம் அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வேண்ட, சிவபெருமான் யாளி பறவையின் தலையும், சிங்க உடலும் கொண்ட சரபேஸ்வரர் வடிவமெடுத்து நரசிம்ம மூர்த்தியை தனது ராட்சத சிறகுகளால் அரவணைத்து, அவரின் உக்கிரத்தைத் தணித்தார். சரபேஸ்வரர் மூர்த்தி எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்ட தெய்வமாக விளங்குகிறார். அவரை வழிபட்டு நன்மைகள் பெறுவதற்காக செய்யப்படும் ஒரு ஹோமம் தான் சரபேஸ்வரர் ஹோமம் ஆகும்.

சரபேஸ்வரர் ஹோமத்தை அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கொண்டு செய்வதே சாலச் சிறந்ததாகும். இந்த ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாம் என்றாலும் தமிழ்நாட்டில் திருபுவனத்தில் இருக்கும் அருள்மிகு சரபேஸ்வரர் கோயிலில் செய்வது நிச்சயமான பலன்களை அளிக்க வல்லதாக இருக்கிறது. இந்தக் கோயிலில் சரபேஸ்வரர் ஹோமத்தை செய்து நற்பலன்கள் பெற்ற பக்தர்கள் ஏராளம் இருக்கின்றனர். எனவே வருடம் முழுவதும் இங்கே இந்த ஹோமத்தை செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தக் கோயிலிலேயே சரபேஸ்வரர் ஹோம பூஜைக்கான தொகையை செலுத்தி சரபேஸ்வரர் ஹோமத்தை செய்து கொள்ளலாம். ஹோமம் முடிந்ததும் சரபேஸ்வரருக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் ஹோம பூஜை செய்யும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

- Advertisement -

sarabeswar 3

சரபேஸ்வரர் ஹோமம் பூஜையை செய்வதன் பிரதான நோக்கமே கண் திருஷ்டிகள் மற்றும் நம்முடைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை,ஏவல் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நீக்கி நன்மைகளை பெறுவதற்காக தான். மேலும் இந்த ஹோமம் பூஜை செய்து கொள்வதால் நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். கடன் தொல்லைகளிலிருந்து நீங்குவதற்கான வழிகள் பிறக்கும். திருமணத் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
பரணி நட்சத்திர தோஷங்கள் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sarabeswarar homam in Tamil. It is also called as Thirubuvanam sarabeswarar kovil in Tamil or Kan thirusti neenga in Tamil or Homangal in Tamil or Homangal poojaigal in Tamil.