கலைகளில் சிறந்து விளங்க மந்திரம்

saraswathi manthiram
- Advertisement -

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்க வேண்டிய சூழ்நிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். இருப்பினும் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்ற அவ்வை பாட்டியின் சொல்லுக்கு இணங்க நாம் எவ்வளவுதான் படித்து தேறினாலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாகவே இந்த உலகத்தில் இருக்கிறது. அப்படி நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அறிவை என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் எந்த மந்திரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு தொழிலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்தத் தொழிலுக்குரிய அறிவை நாம் பெற வேண்டும். எந்த ஒரு கலையை நாம் கற்க வேண்டும் என்றாலும் அந்த கலைக்குரிய அறிவை நாம் பெற வேண்டும். இப்படி எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயலுக்குரிய அறிவு நமக்கு இருந்தால்தான் அந்த செயலை நம்மால் செம்மையாக செய்து முடிக்க முடியும். அந்த அறிவை தரக்கூடிய ஆற்றல் மிகுந்த தெய்வமாக தான் சரஸ்வதி தேவி விளங்குகிறார்.

- Advertisement -

சரஸ்வதி தேவியை நினைத்து வழிபடுபவர்களுடைய அறிவானது தெளிவடையும். சிறந்த ஞாபக சக்தி ஏற்படும். எந்த கலையையும் விரும்பி சரஸ்வதி தேவியின் அருளோடு கற்பவர்களுக்கு அந்த கலை என்றுமே அவர்களுடைய வாழ்க்கையில் நிலைத்து இருக்கும். இப்படி சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய சில வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். இந்த வழிமுறைகளை படிப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் அனைவரும் செய்யும் வகையில் தான் திகழ்கிறது.

முதலில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யார் ஒருவர் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து தங்களின் காரியங்களை செய்ய தொடங்குகிறார்களோ அவர்களுடைய அன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும். மேலும் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது நம்முடைய அறிவையும் மனதையும் தெளிவான நிலைக்கு பக்குவப்படுத்தக்கூடிய நேரமாக திகழ்கிறது. அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை முதலில் கொண்டுவர வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக சூரிய உதயம் ஆகும் பொழுது சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். இப்படி நம்முடைய கண்களால் சூரிய பகவானை பார்த்து வணங்கும் பொழுது சூரிய பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நேர்மறை சக்திகள் நம் உடலில் அதிகரிக்கும். மருத்துவ ரீதியாக சூரிய உதயத்தின் பொழுது வரக்கூடிய சூரிய ஒளி கதிர்களால் நம் கண்களுக்கும் நம் உடலுக்கும் பல நல்ல ஆரோக்கியமான சக்திகள் கிடைக்கிறது.

சூரிய நமஸ்காரம் செய்த பிறகு நம்மால் இயன்ற அளவு தோப்புக்கரணம் போட வேண்டும். இப்படி நாம் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் நம்முடைய மூளை நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும். பாதி அளவு வரை உட்காருவது போல் உட்கார்ந்து விட்டு எழுந்து கொள்வது என்பது முழுமையான தோப்புக்கரணம் கிடையாது. நன்றாக கீழே அமர்ந்து எழுந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வயதானவர்களால் இதை செய்ய முடியாது என்றாலும் குழந்தை பருவத்தில் இருக்கும் அனைவரும் இந்த தோப்புக்கரணத்தை தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் முழுமையாக அமர்ந்து எழுவதன் மூலம் நம்முடைய மூளையானது சிறப்பாக செயல்படும். அதோடு மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கக்கூடிய குண்டலினி சக்தி செயல்பட ஆரம்பிக்கும்.

கடைசியாக இப்பொழுது சரஸ்வதி தேவிக்குரிய மந்திரத்தை பார்ப்போம். இந்த மூன்றையும் செய்து முடித்த பிறகு நாம் ஒரு வேலையை செய்வதற்கு முன்பாக அல்லது படிப்பதற்கு முன்பாக இந்த மந்திரத்தை 21 முறை உச்சரித்த பிறகு படிக்க ஆரம்பித்தால் கண்டிப்பான முறையில் நாம் படிக்கும் படிப்பானது நம் மனதில் என்றுமே நீக்கமற நிறைந்திருக்கும்.

மந்திரம்

“யாதேவி சர்வ பூதேஸூ வித்யா ரூபனே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ”

இதையும் படிக்கலாமே: காரிய சித்தி மந்திரம்

மேற்கூறிய வழிமுறைகளை அன்றாடம் நம்முடைய வாழ்வில் நாம் பின்பற்றினால் அனைத்து விதமான கலைகளையும் கற்று தேர்ச்சி பெற முடியும்.

- Advertisement -