படித்ததை தேர்வில் மறக்காமல் இருக்க சரஸ்வதி மந்திரம்

saraswathi-manthiram

நம் குழந்தைகள் சில நேரங்களில் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். எப்படியோ படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்வு சமயங்களில் படித்து முடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் மனதிற்குள், படித்தது எல்லாம் தேர்வில் மறந்து விடுமோ என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். படித்ததை நன்றாக தேர்வில் எழுதுவோம் என்ற தன்னம்பிக்கையே வராது. மறந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். தேர்வு பயத்திலேயே மறந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மன தைரியத்தையும், நினைவாற்றலையும் கொடுக்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவியின் ஆசியினை முழுமையாக பெற்றால் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் கூட நீங்கிவிடும். முதலில் சரஸ்வதி தேவிக்கு பிடித்தமான செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை இந்த பூக்களில் ஏதாவது ஒன்றை சூட்ட வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். சரஸ்வதி தேவியின் முன்பு மன பலகை போட்டு அதன் மீது அமர்ந்து இந்த மந்திரத்தை மாணவர்கள் மனதார காலைவேளையில், படிக்க தொடங்குவதற்கு முன்பு உச்சரிக்கவேண்டும். உங்களுக்கான சரஸ்வதி மந்திரம் இதோ.

Goddess Saraswathi

“ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”

இந்த மந்திரத்தை மாணவர்கள் தினமும் ஐந்து முறை உச்சரித்து வந்தால் அவர்களது மனதில் இருக்கும் பயம் நீங்கி நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். மாணவர்களின் கடின உழைப்போடு சேர்ந்து சரஸ்வதியின் அருளும் கிடைப்பதன் மூலம் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்வில் நிச்சயமாக அதிக மதிப்பெண்ணையும் பெறமுடியும். ஏதோ படிக்க வேண்டும் என்று கடமைக்காக படிக்காமல் இன்றைக்கு நாம் படிக்கும் படிப்பு தான் நம் எதிர்காலத்திற்கு முன்னேற்றத்தை தரப் போகிறது என்பதை மனதில் நினைத்துக் கொண்டு படித்தால் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வில்லை என்றால், ‘படித்தால் என்ன நன்மை’ அவர்களுக்கு ஏற்படும். ‘படிக்கவில்லை என்றால் என்ன கஷ்டத்தை எதிர் கொள்வார்கள்’. என்பதை புரியும்படி எடுத்துச் சொன்னாலே போதும்.

இதையும் படிக்கலாமே
சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Saraswathi mantra Tamil. Saraswathi manthiram. Saraswati mantra lyrics Tamil. Saraswati sloka Tamil. Saraswati slogam Tamil.