சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’

Sani Bagavan

ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், ‘வாழ்க்கை என்றால் என்ன’ என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது. தோல்வியே ஏற்படாமல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் மனிதனுக்கு தலைக்கனமும் அதிகமாகிவிடுகிறது. அந்த சமயத்தில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை பற்றி புரிய வைக்க சனிபகவானால் மட்டுமே முடியும். தொடர்ச்சியாக வெற்றியை கண்டு விட்டால் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும், அவர்களுடைய மனதில் சிறிய அளவு கர்வமானது ஏற்பட்டுவிடுகிறது. இதனால் தான் கடவுள் எப்பொழுதும் மனிதனுக்கு தோல்விகள் கலந்த வெற்றியை தருகின்றார். குறிப்பாக மனிதன் தோல்வியை சந்திக்கும் காலமானது ஏழரைச் சனியில் நடக்கும். ஏழரைச்சனியின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பண கஷ்டம் அதிகமாக ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் சனிபகவானின் தாக்கத்திலிருந்து முழுமையாக தப்பித்துவிட முடியும் என்று கூறிவிட முடியாது. சனி பகவானை சாந்தப்படுத்தி தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். சனி பகவானைச் சாந்தப்படுத்த வேண்டும் என்றால் அந்த ஈசனை வழிபட வேண்டும். சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உங்களுக்கான சிவஸ்தோத்திரம் இதோ.

sani-baghavan

சிவ ஸ்தோத்ரம்
1. விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

2. கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

3. பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

- Advertisement -

4. சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

5. பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

6. பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

sivan (1)

7. ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

8. முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

சனிபகவானால் உங்களுக்கு பணப்பிரச்சனை அதிகமாகும் சமயத்தில், இந்த ஸ்தோத்திரத்தை ஒருமுறை உச்சரித்துவிட்டு முழு உளுந்தை சனிபகவானுக்கு நெய்வேத்தியமாக படைத்து, அந்த உளுந்தினை தானமாக கொடுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறையும்.

sani-temple-1

சனி பகவானுக்கு மந்தன் என்றொரு சிறப்பு பெயர் இருப்பது பற்றி நாம் அறிவோம். அதற்கு காரணம் அவர் மற்றகிரங்களை போல இல்லமால் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அப்படி மெதுவாய் பெயர்ச்சி அடைவதால் அவருக்கு மந்தன் என்ற சிறப்பு பெயர் உண்டு. அதை குறிப்பிடும் வகையில் அவர் காலை தாங்கி நடப்பது போல சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. இதை மையமாக கொண்டு காலை தாங்கி நடக்கும் அல்லது கால்கள் இல்லமால் தவிக்கும் ஊனமுற்றோருக்கு பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்தோயமானால் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பலாம் என்பது சான்றோர்களின் வாக்காக உள்ளது.

இதையும் படிக்கலாமே:
நீங்கள் இழந்த செல்வத்தை மீட்டு எடுக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்

English Overview:
Here we have Sivan stotram in Tamil. It is also called as Shivan stotra or Shivan mantra in Tamil.