ஒரே ஒரு முறை இந்த பால் அபிஷேகத்தை செய்துவிட்டால், வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுக்கும் தவறான எந்த முடிவையும் எடுக்கவே மாட்டீங்க.

milk
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைய வேண்டும். சிலர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆரம்பத்தில் சாதகமாக அமைந்தாலும், போகப்போக பாதகமாக முடிந்துவிடும். நாம் எதை நல்லது என்று நினைத்து தேர்ந்தெடுத்தோமோ, பிற்காலத்தில் அது நமக்குத் தீமை விளைவிக்கக் கூடிய விஷயமாக மாறிவிடுகின்றது. கட்டிய வாழ்க்கை துணையிலிருந்து, படித்த படிப்பிலிருந்து, செய்யும் வேலை வரை நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

நம் கையை விட்டு நழுவி போகக் நல்ல கூடிய நல்ல நல்ல வாய்ப்புகளை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. ஏனென்றால் இன்று நம் கையை விட்டு நழுவிச் சென்ற நல்ல விஷயம், நாளை நமக்கு கெடுதல் தரக்கூடிய விஷயமாக இருக்கும் என்பது அந்த கடவுளுக்கு நன்றாகவே தெரியும்.

- Advertisement -

சரி, நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும் என்றால் என்ன செய்வது. நம் உடம்பில் இருக்கக் கூடிய அந்த எதிர்மறையான சக்தியை, பாதகமான முடிவை எடுக்க தூண்டக்கூடிய அந்த கெட்ட சக்தியை, நம் கையை விட்டு கழுவி விட வேண்டும். அது எப்படி என்ற ஒரு சிறிய தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எச்சில் படாத ஏதாவது ஒரு தட்டை எடுத்து கொள்ளுங்கள். அந்தத் தட்டில் மீது முதலில் 3 வரமிளகாய், ஒரு ஸ்பூன் கடுகு, 5 மிளகு இந்த மூன்று பொருட்களையும் போட்டு உங்கள் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய டம்ளரில் 1/2 டம்ளர் அளவு காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பசும் பால் பாக்கெட் பால் எது கிடைத்தாலும் சரி.

- Advertisement -

அந்த டம்ளரில் இருக்கக்கூடிய பாலை இடது கையில் எடுத்துக் கொண்டு, உங்களுடைய வலது கையை இந்த பாலை கொண்டு கழுவ வேண்டும். நீங்கள் அந்த கையை கழுவி விட கூடிய பால் தட்டில் இருக்கும் அந்த 3 பொருட்களின் மேல் விழ வேண்டும். உங்கள் கையில் உங்கள் உடம்பில் இருக்கும் எல்லா நெகட்டிவ் எனர்ஜியையும், நீங்கள் தவறான பாதைக்கு போக தூண்டக்கூடிய எதிர்மறை சக்தியையும் அந்தப் பாலின் மூலம் தட்டில் இருக்கும் மூன்று பொருட்கள் உறிஞ்சிக்கொள்ளும்.

பூஜை அறையை தவிர்த்து வேறு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு இந்த தட்டில் இருக்கக்கூடிய பொருட்களையும் பாலையும் அப்படியே ஒரு தேவையில்லாத கவரில் ஊற்றி கொண்டு போய் கால் படாத இடத்தில் உங்கள் வீட்டை தாண்டி தூரமாக போட்டுவிட்டு வந்து விடுங்கள். திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யலாம். அல்லது அமாவாசை தினத்தில் செய்யலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். இதுவும் திருஷ்டி கழிப்பது போல ஒரு பரிகார முறை தான். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பாருங்கள். வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -