ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான நைவேத்திய பொங்கல் வைப்பதில்லை. தித்திக்கும் பொங்கலை தினுசு தினுசாக செய்வதைப் போல, 2025 ஆம் ஆண்டு இந்த முறையில் நீங்கள் பொங்கல் செஞ்சு பாருங்க ரொம்பவே அருமையாக இனிக்க இனிக்க சர்க்கரை பொங்கல் பிரமாதமாக வரும். தித்திக்கும் நைவேத்திய சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.
நைவேத்திய சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :
நைவேத்திய சர்க்கரை பொங்கல் செய்முறை விளக்கம் :
இந்த சர்க்கரை பொங்கல் செய்வதற்கு பழக்கப்படுத்திய புது பானையை எடுத்துக் கொள்ளுங்கள். புது பானையை அப்படியே பயன்படுத்தக் கூடாது. சூரிய ஒளியில் செங்கலை அடுக்கி அடுப்பு தயாரித்து, விறகை பற்ற வைத்து பானையை வைத்து பாரம்பரிய அலங்காரங்களை செய்து நான்கு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை கப் பாலும், ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான பசு நெய்யும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பிக்கும் முன்னர் களைந்து அலசி சுத்தம் செய்து ஊற வைத்துள்ள பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அதனுள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பொங்கல் கொதித்து பொங்கி வரும் சமயத்தில் சூரிய பகவானை வணங்கி, குலவை சத்தம் போட வேண்டும். அடுப்பில் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வர நன்கு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொருபுறம் ஒரு சட்டியில் ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள். அதில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொங்கல் நீர் வற்றி நன்கு வெந்து வந்ததும், காய்ச்சிய வெல்லப்பாகு, நெய்யுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து, பொடித்து வைத்துள்ள ஏலக்காயையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கலந்து விட்டதும், கடைசியாக பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்து, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி ஒரு முறை கலந்து விட்டு இறக்கினால் இனிக்க இனிக்க தித்திப்பான நைவேத்திய பொங்கல் தயார்!
இதையும் படிக்கலாமே:
பொங்கலுக்கு காப்பு கட்டும் முறை
இறைவனுக்கு படைக்கும் பொழுது தித்திக்கும் பொங்கலில் உப்பு சேர்க்கக் கூடாது. சிலர் இனிப்பை தூக்கி காட்டுவதற்கு சிறிதளவு உப்பை சேர்ப்பார்கள். பூஜைக்கு பயன்படுத்தும் சர்க்கரைப் பொங்கலில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல் நைவேத்திய பொருளை எச்சில் படாமல், சுவை பார்க்காமல் தயார் செய்ய வேண்டும். தயார் செய்து வைத்துள்ள பொங்கலை வாழை இலையில் வைத்து வழிபாடுகள் செய்த பின்பு, முதலில் காக்கைக்கு வைத்து பின் தான் வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.