நம்முடைய சருமமானது ரொம்பவும் மிருதுவானது. எல்லா இடங்களில் இருக்கக்கூடிய சருமமும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. குறிப்பாக மூட்டு பகுதிகளில் உண்டாகக்கூடிய நிற மாற்றம், பலருக்கும் வித்தியாசமாக தென்படும். இப்படி அல்லாமல் சருமத்தின் நிறம் மேலும் மெருகேற முழங்கால், முழங்கை கருமை நீங்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
உடம்பில் இருக்கும் முழங்கால் மற்றும் முழங்கை பகுதியில், மூட்டு பகுதிகளில் இருக்கக்கூடிய கருமையை கூட நீக்கக்கூடிய ஆற்றல் இந்த ஸ்க்ரப்பருக்கு உண்டு. இது இயற்கையாகவே நம் சருமத்தில் இருக்கின்ற இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் சருமம் ஆனது மிருது தன்மையாக இருக்கிறது. அந்த காலத்தில் குளிக்கும் பொழுதே இந்த ஸ்க்ரப்பரை பயன்படுத்தினார்கள்.
இயற்கையான ஸ்க்ரப்பர் பயன்படுத்தும் பொழுது, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் விளைகின்றது. அத்தகைய ஸ்கிரப்பர் தான் தேங்காய் நார்! இந்த தேங்காய் நார் குளியல் உடலை ஒரு விதமான புத்துணர்ச்சியாக்குகிறது. இந்த தேங்காய் நாரை பயன்படுத்தி தான் முழங்கால், மூட்டு பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை தன்மையை நாம் இப்பொழுது விரட்டி அடிக்க போகிறோம். இதற்கு முதலில் தேவையான அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் ஆறியதும் அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு தேன் ஊற்றிக் கொள்ளுங்கள்.
தேன் சேர்த்து நன்கு கரைந்ததும், தேங்காய் நாரை கொண்டு இந்த தண்ணீரை தொட்டு தொட்டு முழங்கால், முழங்கை பகுதியில் இருக்கக்கூடிய கருமைப்படர்ந்த இடங்களில் லேசாக ஸ்கிரப் செய்வது போல தேய்க்க வேண்டும். முழங்கால், மூட்டு மட்டும் அல்லாமல் பாதங்கள், கால், கால் விரல்கள், கைகளில் இருக்கக்கூடிய கருமையை கூட இந்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் எளிதாக விரட்டி அடிக்க முடியும்.
முகத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்த ஸ்கரபரை நாம் பயன்படுத்தி பயன் பெறலாம். ரொம்பவே நல்ல ஒரு எஃபக்டிவ் ஆக இருக்கக்கூடிய இந்த ஒரு ஸ்க்ரப்பர் எளிதாக கிடைப்பதால் செய்வதற்கு சுலபமாக இருக்கும். கழுத்து கருமையை கூட இந்த வகையில் நாம் ஸ்கிரப் செய்து வரும் பொழுது, ரொம்பவே விரைவில் நல்ல பலனை காண முடியும். தேன் நல்ல ஒரு கிளென்சர், எனவே ரொம்ப ஈசியாக கரடு முரடான கருமையை நீக்கி விடும்.
இதையும் படிக்கலாமே:
முடி நீளமா வளருது ஆனால் அடர்த்தியாக இல்லையா? இந்த 4 இயற்கை பொருட்கள் கொண்டு ஹேர் பேக் போட்டு பாருங்க முடி இனி அடர்த்தியாகவும் வளரும்!
பொதுவாக நாம் குளிக்கும் பொழுது சோப்பு போட்டு எல்லா இடங்களிலும் மென்மையாக தான் தேய்ப்போம். இதனால் இத்தகைய இடங்களில் எல்லாம் அழுக்குகள் படிந்து கருமை உண்டாகிறது, ஆனால் இது போல ஸ்க்ரப்பர் கொண்டு ஸ்கிரப் செய்யும் பொழுது இறந்த செல்களை அது நீக்கி விடுகிறது. இதனால் சருமமானது பொலிவுடன் இருக்கும். மீண்டும் இழந்த நிறத்தை அடைய முடியும். இதனுடன் பயத்த மாவு அல்லது கடலை மாவு தொட்டு தேய்த்து இதே போல நீங்கள் ஸ்கிரப் செய்தால், அந்த இடத்தில் நல்ல ஒரு நிறமும் கூட ஆரம்பிக்கும். சாதாரண சரும நிறத்திற்கு உங்களை கொண்டு வரும். இதனால் பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும். மென்மையாக உங்களுடைய சருமமும் மிருதுவாகும்.