உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய, நன்மைகள் ஏற்பட இதை துதியுங்கள்

இன்றைய நவீன உலகில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அத்தகைய பயணம் பாதுகாப்பாக அமைவதற்கும் மேலும் நன்மைகள் ஏற்படவும் மந்திரம் இதோ.

amman

மனிதர்களாகிய நாம் தினமும் ஒரு சில மணி நேரம் மட்டுமே ஓரிடத்தில் இருந்தாலும் மற்ற நேரங்களில் எங்காவது பயணம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இன்றைய காலங்களில் வேலை, தொழில், வியாபாரம் விடயமாக பயணம் என்பது அனைவருக்கும் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இப்படியான பயணங்களின் போது சிலருக்கு தடை, தாமதங்கள் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு எதிர்பாரா ஆபத்துகளும் உண்டாகிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் “சர்வமங்கள மந்திரம்” இதோ.

amman

சர்வமங்கள மந்திரம்

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

சக்தி தேவிக்குரிய சர்வமங்கள மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் தேவியை மனதில் நினைத்து 27 முறை இந்த மந்திரத்தை ஜெபித்து விட்டு வெளியில் செல்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளி நாடு பயணம் மேற்கொள்ளும் முன்பு தேவியை நினைத்து, இந்த மந்திரத்தை 108 முறை கூறி ஜெபிப்பதால் உங்கள் பயணத்தில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும் பயணம். பாதுகாப்பாக அமையும் அந்தப் பயணத்தால் உங்களுக்கு பொருளாதார நன்மைகளும் உண்டாகும்.

Mariamman

உலகில் எந்த ஒரு விடயமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலை வடமொழியில் சக்தி என்கின்றனர். அந்த சக்தியை பெண்ணின் வடிவமாக போற்றி வழிபட்டனர் நமது முன்னோர்கள். பெண் ஒரு இடத்தில் இருந்தாலும் அங்கு சர்வமங்களமும் ஏற்படும் என்பது உறுதி. அப்படியான சக்தி தேவிக்கு உரிய இந்த சர்வமங்கள மந்திரத்தை துதிப்பவர்களுக்கு அந்த தேவி அனைத்து நன்மைகளையும் அருள்வாள்.

இதையும் படிக்கலாமே:
வேலை தொழில்களில் ஏற்படும் பிரச்சனை போக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sarvamangala mantra in Tamil. It is also called as Devi mantras in Tamil or Shakti mantras in Tamil or Sarvamangala sloka in Tamil or Payanathadai neenga in Tamil.