வைகாசி விசாகம் அன்று முருகா முருகா என்று கூப்பிட்டு முருகனை வழிபாடு செய்தாலே போதும். நீங்கள் முருகனுக்கு சொந்தமான மனிதராக மாறிவிடுவீர்கள். இந்த வைகாசி விசாகத்தின் சிறப்பு என்ன. அந்த சிவபெருமான் நெற்றிக்கண்களிலிருந்து தீப்பிழம்பாக முருகப்பெருமான் அவதரித்த நாள். இன்று இந்த நாளில் முருகனை போற்றி புகழ்ந்து பாடினாலே போதும். முருகப்பெருமான் நமக்கான வரங்களை வாரி வாரி கொடுத்து விடுவார்.
நம்முடைய வாயிலிருந்து வரும் முருகப்பெருமானின் பாடல் வரிகள், நம்முடைய ரத்தத்தோடு கலந்து விடும். நம்முடைய உடம்பு முழுவதும் ஓடக்கூடிய ரத்தம் கூட, முருகா முருகா என்ற வார்த்தையை சொல்லி ஓடும். முருகப்பெருமானுடைய பிறந்த நாளான இன்று அவனுக்கு நம்மால் என்ன பரிசை கொடுக்க வேண்டும். அழகான தமிழ் வார்த்தைகளால், அழகான நான்கு வரி பாடலைத் தான் கொடுக்க வேண்டும்.
அப்படி பார்த்தால் முருகப்பெருமானுக்கு உகந்த பாடல் கந்த சஷ்டி கவசம். எல்லோரும் ஒருமுறை இந்த வைகாசி விசாக நாளில், முழுசாக கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும். பாட முடியவில்லை என்றாலும் சரி, உங்கள் செவிகளால் கேட்டு விடுங்கள். அதுவே மிகபெரும் பாக்கியம்.
அதற்கு சுத்தமாக நேரமில்லை. காலையில் எழுந்து அலுவலகத்திற்கு சென்றால், இரவு வந்து தூங்குவதற்கு நேரம் சரியாக இருக்கிறது என்று நீங்கள் யோசித்தால், எந்த தவறும் கிடையாது. காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெறும் வயிற்றோடு முருகப்பெருமானின் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த 10 வரிகளை மட்டும் படித்துவிட்டு உங்கள் அன்றாட வேலையை பார்க்க கிளம்பி விடலாம்.
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
நம்முடைய ஐம்புலன்களை காக்க வேண்டிய வேலையை முருகப்பெருமான் எடுத்துக் கொண்டால் போதும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது. அந்த ஐம்புலன்களையும் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பாடல் வரிகள் கந்த சஷ்டி கவசத்தில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்) இவைகளைத்தான் ஐந்து புலன்கள் என்று சொல்லுவோம்.
ஐந்து புலன்களையும் அடக்கி ஆள வேண்டும் என்று சில பேர் நினைப்பார்கள். ஆனால் மனிதர்களால் அது நிச்சயம் முடியாது. இந்த ஐந்து புலன்களையும் அடக்கி வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட, அந்த ஐந்து புலன்களையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் நாம் வைத்துக் கொண்டால் போதும். நம்முடைய வாழ்க்கை சொர்க்கமாக மாறிவிடும்.
இதையும் படிக்கலாமே: சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஞாயிறு பிரதோஷம்
இந்த ஐந்து புலன்களையும் அந்த முருகப்பெருமான் காக்க வேண்டும் என்று எண்ணி நாளைய தினம் வைகாசி விசாகத்தன்று இந்த பாடலை படித்து விடுங்கள். முருகப்பெருமான் உங்களை காப்பதற்கு ஓடோடி வந்து விடுவார். உங்கள் ரத்தத்தோடு கலந்து விடுவார். இந்த வைகாசி விசாகத்தில் இந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.