- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

சஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

ஒரு சில நாட்களுக்கு முன்பு சஷ்டி விரதம் ஆனது நிறைவடைந்தது. கந்த சஷ்டி விரதம் என்பது தீபாவளி முடிந்து வரக்கூடிய அந்த ஆறு நாட்கள் தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஒரு சில பேரால் அந்த விரதத்தை இருக்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கும். விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கை சூழல், காலமும் நேரமும் அந்த விரதத்தை இருக்க விடாமல் தடுத்திருக்கும்.

பரவாயில்லை நீங்கள் கவலைப்பட வேண்டாம். சஷ்டி விரத நாட்களில் முருகனிடம் என்ன வேண்டுதல் வைத்து வழிபட வேண்டும் என்று நினைத்தீர்களோ, சஷ்டி விரதத்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும், உங்களுக்கு சஷ்டி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

- Advertisement -

சஷ்டி விரதம் என்பது வருடத்தில் ஒருமுறை வரக்கூடிய ஒரு வழிபாட்டு முறை. ஆனால் வருடம் முழுவதும் தான் நமக்கு கஷ்டம் இருக்கிறது. ஆகவே கஷ்டம் இருக்கும்போது, முருகனை இந்த முறைப்படி வழிபாடு செய்தாலும் நல்ல பலன் நிச்சயம் உண்டு.

முருகன் வழிபாடு

இதை துவங்க ஒரு நல்ல நாளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று தான் துவங்க வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது. வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இப்படி துவங்கினாலும் தவறு கிடையாது. முதலில் பூஜையறையில் ஒரு மனப்பலகையை போட்டு, அந்த மனப்பலகையில் அரிசியால் அறுங்கோண சக்கரம் வரைய வேண்டும். ஸ்டார் கோலம் வரைந்து விட்டு, அதற்கு நடுவே சரவணபவ என்று எழுதி விடுங்கள்.

- Advertisement -

6 முனைகளிலும் ஆறு விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். இது சரவணபவ மந்திரத்திற்கான 6 விளக்கு. கோலத்தில் நடுவில் ஒரு இடம் இந்தக் கோலத்தில் காலியாக இருக்கும். அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கு வையுங்கள். உங்களுடைய கோரிக்கையை சொல்லி அந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

ஏதோ ஒரு வேண்டுதலுக்காக தான் முருகனை வழிபாடு செய்கின்றோம். அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு, அந்த விளக்கு. இவ்வளவுதான் பூஜை அறையில் முருகரின் திரு உருவப்படம் அல்லது வேல் எது இருந்தாலும் அதற்கான அலங்காரங்கள் அபிஷேகங்களை எல்லாம் செய்து முடித்து விடுங்கள். தினமும் முருகருக்கு பூஜை செய்து வர வேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து 9 நாள், 11 நாள் உங்களுடைய விருப்பம் தான். எத்தனை நாள் வழிபாட்டை வேண்டும் என்றாலும் மேற்கொள்ளலாம். ஆனால் தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாள் அந்த மனப்பலகையில் அரிசியில் நட்சத்திர கோலம் போட்டு விட்டால் போதும். அதை தினமும் கலைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

விரதம் இருக்கக் கூடிய 9 நாட்களும் அதே கோலத்தில் அதே மண் அகல் விளக்கில் புதுசாக நெய்விட்டு, புதுசாக பஞ்ச திரி போட்டு, விளக்கு ஏற்றி வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்கலாம். முருகனுக்கு ஒரு நெய்வேத்தியம் வைத்து, உங்களால் முடிந்த முருகன் மந்திரத்தை சொல்லுங்கள். முருகன் பாடலை படியுங்கள். இல்லை என்றால் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு இந்த வழிபாட்டை முடித்துவிட்டு நீங்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளக்கூடிய சைவ உணவை சாப்பிடலாம். தவறே கிடையாது. இடைவிடாமல் 9 நாள் இந்த வழிபாட்டை ஒரே ஒரு கோரிக்கையை வைத்து செய்தால் நிச்சயம் அந்த கோரிக்கையானது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் முருகப்பெருமான் நீங்கள் கேட்ட வரத்தை மறக்காமல் கொடுத்துவிடுவான். சரி, விரதம் முடிந்த பிறகு அரிசியில் ஸ்டார் கோலம் வரைந்து வைத்திருக்கிறோமே, அதை என்ன செய்வது.

அந்த அரிசியை எல்லாம் எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் ஊற வைத்து வெல்லம் சேர்த்து பசு மாட்டிற்கு கொடுக்கலாம். முடியும் என்றால் அதை பொங்கலாக சமைத்து நாமும் சாப்பிடலாம். (பச்சரிசியை பயன்படுத்தி அந்த கோலத்தை வரைந்து கொள்ளுங்கள்).

இதையும் படிக்கலாமே: சிவபெருமானின் அருள் பெற பிரதோஷம் மந்திரம்

இந்த வழிபாட்டை இன்று தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது உங்களுக்கு எப்போ கஷ்டம் வருதோ, எப்போ வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலை வருதோ, அப்போது கடைபிடித்தாலே முருகன் உங்களுக்கான அருள் ஆசியை கொடுத்து விடுவான். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

சற்று முன்