உணவு பரிமாறும் பொழுது இந்த தவறை மட்டும் தவறியும் செய்து விடாதீர்கள்! அப்புறம் அவ்ளோதான் உங்க வீட்டில் வறுமை தாண்டவமாடும்.

annapoorani-rice
- Advertisement -

உண்ணும் உணவிலும் இறைவன் இருக்கிறான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் அன்னபூரணி என்கிற கடவுளும் உருவானார். அன்னத்தை பகிரும் அன்னபூரணியை மதித்தால் தான் நாம் வறுமை இல்லாமல் வாழ முடியும். அன்னத்தை அவமதிக்கும் பொழுது அன்ன தோஷம் ஏற்படுகிறது. அன்ன தோஷம் ஏற்பட்டால் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் வறுமை உண்டாகும். ஒருபுறம் பசியால் வாடும் உயிர்களும்! இன்னொருபுறம் உணவை வீணாக்கும் உயிர்களும்! ஒன்றாக தான் இந்த பூமியில் வாழ்கின்றோம்.

eating-food

அப்படி இருக்கும் பொழுது கிடைக்கின்ற அன்னத்தை அன்னபூரணியாக நினைத்து, மதித்து, சாப்பிடும் பொழுதும், பரிமாறும் பொழுதும், சமைக்கும் பொழுதும் நடந்து கொண்டால் என்றும் வறுமை இல்லாத செல்வ செழிப்பான வாழ்க்கை உண்டாகும். ஒருவருக்கு எவ்வளவு தான் பணம் இருந்தாலும் ஒரு வேளை உணவை நிம்மதியாக சாப்பிட முடியாவிட்டால் அத்தனை பணமும் வீண் தானே? அத்தகைய சாப்பாட்டை மதித்து நடப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

அன்னத்தை பரிமாறும் பொழுது எப்பொழுதும் வலது கையால் பரிமாற வேண்டும். இடது கையால் பரிமாறினால் நோய் உண்டாகும். வாழையிலையில் பரிமாறும் பொழுது முதலில் உப்பை தான் பரிமாற வேண்டும். அதன் பிறகு இனிப்பு வைக்க வேண்டும். பிறகு கூட்டு, பொரியல், அவியல், ஊறுகாய், பச்சடி போன்றவற்றை வைக்கலாம். அதன் பிறகு அப்பளம், வடை போன்ற நொறுக்குத் தீனிகளை வைக்க வேண்டும். சித்திரான்னம் எனப்படும் கலந்த வகை சாதங்களை வைத்த பின் அன்னம் பரிமாற வேண்டும். விசேஷ விழாக்களின் பொழுது இலைகளில் இந்த முறையில் தான் பரிமாறுவது வழக்கம்.

food

விஷேங்களில் மட்டும் அல்லாமல் வீட்டிலேயே இவ்வாறு கடைப்பிடித்து வந்தால் அண்ணபூரணியின் அருள் கிடைக்கும். தட்டில் முதலில் உப்பை வைத்து விட்டு அதன் பின் இனிப்பு அல்லது வெல்லம் ஆவது வைத்த பின் வரிசையாக பரிமாறலாம். சாப்பிட்டு முடித்து விட்டு இறுதியில் வெல்லத்தை வாயில் போட்டுக் கொண்டால் போதும் எளிதில் ஜீரணமாகும். பருப்பு, நெய் போன்ற சாதங்களை முதலில் பரிமாறிவிட்டு பின் தான் குழம்பு, ரசம், தயிர் என்று வரிசையாக வர வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் நெய், உப்பு மற்றும் அன்னம் இந்த மூன்று பொருளையும் ஒருபொழுதும் கைகளால் பரிமாறக் கூடாது என்பது நியதி. தப்பித் தவறியும் இந்த மூன்று பொருட்களை கரண்டியால் பரிமாறுவதை விடுத்து கைகளால் பரிமாறி விடாதீர்கள். இதனால் நிச்சயமாக அன்ன தோஷம் ஏற்பட்டு விடும். அன்னத்திற்கு பஞ்சமும், கவலையும் வரும். அன்ன தோஷம் ஏற்பட்டவர்களுக்கு வறுமை மட்டுமல்ல பணம் இருந்தாலும் அவர்களிடம் சாப்பிடும் பொழுது நிம்மதி இருக்காது.

cook1

உணவு சமைக்கும் பொழுது, சமைக்கும் உணவில் சமைப்பவர் உடைய மனநிலையும் அமையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒருவர் முழு ஆர்வத்துடனும், நல்ல மனநிலையுடனும் சமைக்கும் உணவானது மிகவும் ருசியாக அமையும். மனதில் பல விதமான குழப்பங்களும், குடும்பத்தில் நடந்து கொண்டிருந்த சண்டைகளும் நினைவில் வைத்துக் கொண்டு சமைத்தால் சமையலில் ஒரு ருசியும் இருக்காது. சமைக்கும் பொழுது தெய்வ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு சமைக்க வேண்டும். அரிசி புடைக்கும் பொழுது, சமையல் பொருட்களை இடிக்கும் பொழுது, தயிர் கடையும் பொழுது, மேலும் சாதம் வடிக்கும் பொழுதும் கூட இறைவனின் நாமத்தை உச்சரித்து வந்தால் வறுமையை இல்லாத செழிப்பு உண்டாகும்.

- Advertisement -