சதயம் நட்சத்திரக்காரர்கள் அதிக செல்வம் ஈட்ட இதை செய்ய வேண்டும்.

rahu

நவக்கிரகங்களில் ராகு – கேது ஆகிய கிரகங்கள் மட்டும் நிழல் கிரகங்களாக இருக்கிறது. இதில் ராகு கிரகம் செவ்வாய் கிரகத்தின் தன்மையை ஒத்த ஒரு கிரகமாக இருக்கிறது. விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களில் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டதாக சதயம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான செல்வமும், இன்ன பிற நன்மைகளையும் பெறுவதற்காக செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rahu 1

27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்து நான்காவது நட்சத்திரமாக சதயம் நட்சத்திரம் வருகிறது. சதயம் நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக எமதர்மன் இருக்கிறார். ராகு பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் உறுதியான உடலும், மனமும் கொண்டவர்களாக சதயம் நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காலஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரநாதர் கோயில் போன்ற ராகு பகவானுக்குரிய கோயில்களுக்கு சென்று, ராகு பகவான் மற்றும் சிவபெருமானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பெருமாள் கோயில்களில் இருக்கும் கருடாழ்வாருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதும் சிறந்த பரிகாரமாகும். சதயம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் எருமை மாடுகளுக்கு தீவனம் அளிப்பது உங்களின் தோஷங்களை போக்கும்.

Rahu Ketu

சதயம் நட்சத்திரக்காரர்கள் தீராத நோயினால் அவதிப்படும் காலத்தில் ஒரு நூறு பேருக்கு சுத்தமான பசும் பாலை அருந்துவதற்கு கொடுப்பதால், உங்களின் நட்சத்திர தோஷம் நீங்கி எதிர்கால வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தும். சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறிது கருப்பு எள்ளுடன் வெல்லத்தை கலந்து எறும்புகளுக்கு உணவாக கொடுத்து வருவது உங்களின் தோஷங்களைப் போக்கி, வாழ்வில் செல்வ வளம் பெருகச் செய்யும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
தொழில் வியாபாரங்களில் லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sathayam nakshatra pariharam in Tamil. It is also called as Sathayam natchathiram athipathi in Tamil or Sathayam natchathiram athi devathai in Tamil or Nakshatra parigarangal in Tamil or Sathayam natchathira kovil in Tamil.