தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்

narasimmar

நம்மால் ஒரு விடயத்தை காண அறிந்து கொள்ள இயலாத போது அது இல்லவே இல்லை என்று மறுத்து விட முடியாது. நம் சாமானிய கண்களால் காணமுடியாத சூட்சம சக்திகள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றன என கூறப்படுகிறது. அந்த துஷ்ட சக்திகள் நம்மை பாதிக்காமல் இருக்க பல வழிபாடுகள், பரிகார முறைகள் இருக்கின்றன. அதில் அனைவரும் செய்யக் கூடிய மிக எளிய பரிகாரம் ஒன்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

seivinai

நன்றாக இருந்த இல்லற வாழ்வில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுவதும், மகிழ்ச்சி நிலையை படித்த போதும் சிலரது வீட்டில் ஏற்படுகின்றன. அதே போல் நன்கு சென்று கொண்டிருந்த தொழில், வியாபார கூடங்களில் திடீரென்று வியாபாரம் மந்த நிலை, பொருளாதார கஷ்ட நிலை போன்றவை ஏற்படுகிறது. இவையெல்லாவற்றையும் ஆராய்ந்தால் அதற்கு காரணமாக இருப்பது துஷ்ட சக்திகளின் பாதிப்பே என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தகைய துஷ்ட சக்திகளின் பாதிப்பை போக்கி வீடு, தொழில் மற்றும் வியாபார கூடங்கள் சிறப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

தினமும் அதிகாலையில் எழுந்து,குளித்து முடித்ததும் சுத்தமான மஞ்சளில் தொய்க்கப்பட்ட அட்சதை அரிசியை சிறிது எடுத்துக் கொண்டு, உங்கள் வீட்டு வாயிற்படியில் இடது புறம் கொஞ்சம் மற்றும் வலது புறம் கொஞ்சம் அட்சதை அரிசியை விட வேண்டும் இரவு புறங்களிலும் அச்சத்தை அரிசியை இடும்போது “ஓம் பைரவாய நமஹ” என்ற எளிய மந்திரத்தை இரு முறை கூறி அட்சதையை இடவேண்டும்.

kaala bairavar

ஸ்ரீ வைணவ மத சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள் வாசலில் இந்த மஞ்சள் அட்சதை அரிசி இடும் பரிகாரம் செய்யும் பொழுது “ஓம் நரசிங்காய நமஹ” என்று இருமுறை கூறி, இந்த அட்சதையை இட வேண்டும். உங்கள் தொழில் மற்றும் வியாபார தளங்களில் காலையில் சென்று கடை திறக்கும் முன்பாக மேற்கூறிய முறையில் கடையின் இருபுறங்களிலும் மந்திரம் ஜெபித்து அட்சதை இட வேண்டும்.

- Advertisement -

narasima vadham

பைரவர் மற்றும் நரசிம்மர் ஆகிய இருவரும் துஷ்ட சக்திகளை அழித்து நம்மை காத்து நிற்கும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு நிவேதித்த இந்த மஞ்சள் அரிசியை வீட்டு வாயிலில் இட்டு வைப்பதால், எந்த ஒரு துஷ்ட சக்தியும் நம் வீட்டையோ, தொழில் வியாபார தலங்களையோ பாதிக்காது. பொருளாதார முடக்க நிலை, தரித்திரம், வறுமை போன்றவை ஏற்படாது. இந்த பரிகாரத்தை வாழ்நாள் முழுவதும் செய்து வர ஏற்றமிகு பலன்கள் ஏற்படுவதை நீங்களே காணலாம்.

இதையும் படிக்கலாமே:
வேலையில் பதவி உயர்வு கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dushta shakti pariharam in Tamil. It is also called as Theeya sakthi neenga in Tamil or Viyabaram selika in Tamil or Manthrigam pariharam in Tamil or Theeya sakthigal vilaga in Tamil.