இந்த கலியுகத்தில், காலத்தால் கொடுக்கப்படும் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் வழிபட வேண்டிய கடவுள் முருகன். கந்தனை வழிபாடு செய்ய கலியுக கஷ்டத்தில் இருந்து சுலபமாக நம்மால் வெளிவர முடியும். பொய், பொறாமை, பித்தலாட்டம், சண்டை சச்சரவுகள், சுயநலம், அடுத்தவர்கள் சொத்தை அபகரிப்பது, அரக்க குணம், எதிர்மறை ஆற்றல், ஏவல், பில்லி சூனியம் கண் திருஷ்டி இதற்கு மேலே இன்னும் கெட்ட சக்திகள் எல்லாம் சூழ்ந்தது தான் இந்த கலியுகம். இவை எதுவும் நம் கண்ணுக்கு தெரியாது.
ஆனால் இதன் மூலம் பிரச்சினைகள் மட்டும் வரும். இதே கலியுகத்திலும் சில நல்ல மனிதர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம். அதனால்தான் இன்னும் மழை பெய்கிறது. விவசாயம் செழிக்கிறது. இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகள் சூழ்ந்த வாழ்க்கையை நிம்மதியாக அமைய வேண்டும் நம்முடைய வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நமக்கு தைரியம் பிறக்க வேண்டும் நம்மோடு போட்டி போடக்கூடிய எதிரிகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றால், நிச்சயம் அந்த முருகப்பெருமானின் அருள் நமக்குத் தேவை.
கலியுக கஷ்டத்திலிருந்து துன்பத்திலிருந்து விடுபட, கலியுக கடவுள் முருகனை நினைத்து சொல்ல வேண்டிய சத்ரு மந்திரியத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த உலகத்தில் என்னால் வாழவே முடியவில்லை எல்லோருமே என்னை ஏளன பேச்சு பேசுகிறார்கள். என்னுடைய வாழ்க்கையே கேலி கெண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் நேர்வழியில் தான் நடந்து கொண்டிருக்கின்றேன் என்று கஷ்டப்படக் கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இருக்கிறீர்கள். உங்களுக்காகத்தான் இந்த பதிவு.
சத்ரு சம்ஹார முருகன் மந்திரம்
“ஓம் சௌம் சரவணபவ சத்ரு சம்ஹார
சுப்பிரமணிய மூர்த்தியே நமஹ”
இந்த மந்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதீத சக்தி உண்டு. ஓம் என்பது பிரபஞ்சத்தின் பிரணவ ஒலி. சௌம் என்பது முருகப்பெருமானின் பீஜ மந்திரம். சரவணபவ என்பது முருகப்பெருமானின் ஆறுமுகங்களை குறிக்கிறது. சத்ரு சம்ஹாரம் எதிரிகளை அழிக்கக்கூடிய முருகப்பெருமான். சுப்ரமணிய மூர்த்தியே நமஹ. சுப்பிரமணிய கடவுளுக்கு வணக்கம். இதுதான் இந்த மந்திர வார்த்தைகளுக்கு அர்த்தம்.
வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் படத்திற்கு முன்பு இந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, அல்லது தினம் தோறும் இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தாலும் சரி, உங்கள் வாழ்நாள் எதிரி பிரச்சனைகள் நீங்கும். கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எல்லா எதிர்மறை ஆற்றலும் உங்களை விட்டு விலகும். உங்கள் வாழ்க்கை சொர்க்கமாகும். இந்த கலியுகத்திலும் கஷ்டமில்லாமல் வாழ்வதற்கு முருகர் உங்களுக்கான நல்ல வழியை காட்டிக் கொடுப்பார்.
இதையும் படிக்கலாமே: அக்னி வாராகி மந்திரம்
வீட்டின் அருகில் முருகர் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று முருகனை “ஓம் சரவணபவ” மந்திரத்தை சொல்லி, 6 முறை வலம் வந்துவிட்டு, முருகனுக்கு விளக்கு போட்டு, முருகன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுவதும் அதில் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காதீர்கள், துரோகம் நினைக்காதீர்கள், கலியுகத்தில் இருக்கக்கூடிய நல்ல மனிதர்கள் பட்டியலில் உங்களுடைய பெயரும் இடம் பெற வேண்டும். பிறகு இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கும் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.