- Advertisement -

அக்னி வாராகி மந்திரம்

- Advertisement -

நண்பர்களே இல்லாத மனிதர்கள் கூட இந்த பூமியில் இருக்கலாம். ஆனால் எதிரிகள் இல்லாமல் ஒரு மனிதனால் நிச்சயம் வாழ முடியாது. தானாக உருவாகும் எதிரிகள், நம்மை பிடிக்காமல், பொறாமையில் உருவாகும் எதிரிகள், நண்பர்களில் சிலர் எதிரிகளாக இருக்கலாம், தெரிந்த எதிரி கண்ணுக்குத் தெரியாத எதிரி, சொந்த பந்தங்களே சில பேர் எதிரிகளாக இருக்கலாம்.

என்னவென்று சிந்திப்பதற்குள் நம்மை எதிரியாக நினைத்து, நமக்கு துரோகம் செய்யக்கூடிய நிறைய பேர், நம்மோடு சேர்ந்து பயணம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட எதிரி தொந்தரவால் கஷ்டப்படுபவர்கள், வியாபாரத்தில் எதிரிகளால் தோல்வி அடைபவர்கள், எதிரிகளால் ஏவல் பில்லி சூனியம் வைத்து பாதிக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் இந்த வாராஹி மந்திரம் உதவியாக இருக்கும்.

- Advertisement -

எதிரிகள் விலக அக்னி வாராகி மந்திரம்.

ஓம் ஐம் க்லௌம் ரம் ரம்
அக்னி வாராஹி
மம சத்ரூன் பட்சய பட்சய ஸ்வாஹா!

பூஜை அறையில் ஒரே ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்துவிட்டு, அந்த கற்பூர நெருப்புக்கு முன்பாக இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நெருப்பில் எதிரி பிரச்சனை பஸ்பமாகும். எதிரிகள் உயிருக்கு ஆபத்து ஏதும் வராது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உங்கள் பக்கம் நேர்மையும் நியாயமும் உண்மையும் இருக்க வேண்டும்.

- Advertisement -

தெரிந்த எதிரி தெரியாத எதிரி, யாராக இருந்தாலும் சரி, அவர்களால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. உங்களுடைய காவல் தெய்வமாக நின்று, வாராகி உங்களை காத்து அருள்வாள். அதோடு மட்டுமல்லாமல், எதிரிகளால் வரக்கூடிய மன பயத்திலிருந்து விடுபடவும் இந்த மந்திரம் உங்களுக்கு உதவி புரியும். ஒரே குடும்பத்திலேயே சண்டைகள் சச்சரவுகள், நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற பிரச்சனையை வந்தால் விரோதம் வளர்ந்து, ஏதேதோ பேச்சுக்கள் நம்மை துன்புறுத்தும் வகையில் வந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அதிசக்தி வாய்ந்த ஹனுமன் மகாமந்திரம்

நம்முடைய மனம் நோகும். இதுபோல பிரச்சனையிலிருந்து தப்பிக்கவும் இந்த மந்திரத்தை நீங்கள் பிரயோகப்படுத்தலாம். எவ்வளவு பெரிய எதிர்பாக இருந்தாலும், அதை தாங்கும் மன தைரியம் உங்களுக்கு வரும். எதிரிகளால் பெரிய அளவில் தொல்லைகள் இருக்காது எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள். சத்துருக்களை சம்ஹாரம் செய்யும் இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில், மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்