- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை. அவமானத்தை அடியோடு விரட்ட இந்த பரிகாரத்தை இன்றே செய்திடுங்கள்

பாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை. அவமானத்தை அடியோடு விரட்ட இந்த பரிகாரத்தை இன்றே செய்திடுங்கள்

- Advertisement -

இன்றைய அறிவியல் உலகத்தில் மனிதன் தான் முன்னேற்றம் அடைந்ததாக கூறிக் கொண்டாலும் ஒரு சில செயல்களின் வெளிப்பாடுகள் மனிதனின் மாறாத தன்மையை காண்பித்து விடுகிறது. அவ்வாறு அவமானத்துக்கு பயந்து செய்யப்படும் படுகொலைகளும், சண்டை, சச்சரவுகளும் இன்று வரையிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு ஒரு மனிதன் தனக்கு நேரப்போகும் அவமானத்தைத் தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற ஒருசில செயல்களால் அவர்களின் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். செய்த பிறகு எதனையும் மாற்ற இயலாது. எனவே இவ்வாறான அவமான பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், பழி பாவத்தில் இருந்து தப்பிக்கவும் இந்த எளிய பரிகாரத்தை முறையாக செய்தாலே போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poramai

இன்றைய தலைமுறையினரை பொருத்தவரை கடவுள்கள், முனிவர்கள் இவர்களைப்பற்றி படங்களின் மூலம் தெரிந்து கொண்டுள்ளோம். அதில் பாவம் செய்த ஒருவர் முனிவர்களிடம் சென்று பாவவிமோசட்னம் கேட்பார்கள். அப்பொழுது அவர்கள் அந்த மனிதனின் பாவம் தீருவதற்காக சில ஆலோசனை சொல்வார்கள். அதன்படி அவரும் அந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தனது பாவத்தில் இருந்து விடுபடுகிறான். இவ்வாறு ஒருவர் செய்த பாவத்திற்கு விமோட்சனம் என்பது நிச்சயம் இருக்கிறது.

- Advertisement -

ஒருவன் செய்த பாவத்தின் தண்டனையாக தான் அவனது வாழ்நாளில் துன்பத்தை அனுபவித்து வருகிறான். அதனை உணர்ந்து அதற்கான பரிகாரத்தை மனமுருகி செய்து வந்தால் இந்த துன்பத்திலிருந்து தப்பிக்க முடியும். தனக்கு வரப் போகின்ற அவமானத்தையும், அசிங்கத்தையும் முன்கூட்டியே அறிந்து ஒருவர் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு இந்த பருத்திக்கொட்டை பரிகாரத்தை முழுமனதுடன், நம்பிக்கையுடன் செய்து வந்தால் அந்தப் பாவத்திலிருந்து விடுபட முடியும்.

karma

மனிதன் மானம் என பார்க்கப்படுவது முதலில் அவனது உடல் தான். இந்த உடலை மறைப்பதற்கு அணியப்படும் ஆடை பருத்தியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பருத்திக்கு ஒருவரின் மானத்தைக் காப்பாற்றும் ஆற்றல் ஆன்மீகத்தில் இருக்கிறது. அவ்வாறு இந்த பருத்தி பஞ்சினுள் இருக்கும் பருத்திக் கொட்டையை மூன்று கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு கைப்பிடி கல் உப்பையும் எடுத்து கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த கலவையை ஒரு சிறிய துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு, உறங்கும் முன் உங்களது தலையணையின் கீழ் வைத்து மூன்று நாட்கள் உறங்க வேண்டும். பிறகு இந்த முடிச்சுக்குள் இருக்கும் கலவையை நெருப்பு மூட்டி அந்த நெருப்பினுள் சிறிது சிறிதாக தூவி விட வேண்டும். நெருப்பில் அவை எப்படி வெடித்து சிதறுகிறதோ அதுபோல உங்களுக்கு வரப்போகும் பிரச்சினைகளின் தாக்கம் குறைந்து உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

seed

உங்களுக்கு வரப்போகும் பிரச்சனை பெரியதாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பாதிப்பு பெரியதாக இல்லாமல் அவை சாதாரணமாக மாறிவிடும். சிறிய பிரச்சினையாக இருந்தால் அந்த பிரச்சனை உங்களை நெருங்காமல் அகன்றுவிடும். யாருக்கு பிரச்சனை வரப் போகிறதோ அவர் மட்டுமே இந்த பரிகாரத்தை தங்கள் கைகளால் செய்ய வேண்டும்.

சற்று முன்