சனி பகவானால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

good shine of saturn
- Advertisement -

நவகிரகங்களை பொறுத்த வரையில் அவ்வப்போது அவைகள் தங்களுடைய இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களை வைத்து தான் ஜோதிடம் கணிக்கப்படும். ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒரு கிரகத்தின் மாற்றமானது 12 கிரகத்துக்கும் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 75 ஆண்டுகளுக்கு பிறகு மகர சங்கராந்தியையொட்டி சனியின் பெயர்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்பாக அனைத்து ராசியினருக்கும் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதில் சில ராசிகள் செல்வ செழிப்புடன் வாழக் கூடிய யோகத்தை பெறுகிறார்கள். அது எந்த ராசிக்காரர்கள் என்று ஜோதிடம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

சனியின் பெயர்ச்சியால் யோகம் பெரும் ராசிகள்

கர்ம பலன்களை சரியாக பகிர்ந்த அளிக்கக் கூடியதில் நீதிமானாக விளங்க கூடியவர் தான் இந்த சனி பகவான். அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். மகர சங்கராந்தியை ஒட்டி நிகழ்ந்த இந்த பெயர்ச்சியானது ஜோதிடத்தில் ஒரு முக்கிய காலக்கட்டமாக கருதப்படுகிறது. அதன் பலனாக இந்த மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதும் அனைத்து விஷயங்களும் சாதகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு வரும். குழந்தை இல்லா தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக் கூடிய யோகம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்ற நிலையை அடைவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

இந்த ராசியினருக்கு இந்த ஆண்டு பல சாதகமான பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். சனியின் இந்த பெயர்ச்சியால் செல்வ வளத்திற்கு குறைவில்லாமல் இருப்பீர்கள்.

கடகம்

கடக ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் சிறு சில பிரச்சனைகள் வந்தாலும் அவை அனைத்தும் பின் சாதகமாக மாறி விடும். பண வரவுகள் திடீரென அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைக்கூடும். புதிய தொழில் தொடங்குபவர்கள் வியாபாரம் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சனியின் இந்த பெயர்ச்சியால் இவர்களுக்கும் இது பொற்காலம் என்றே சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இந்த பதிவு. இதிலும் அவரவர் ஜாதக கிரக நிலைக்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -