சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிகள்

saturn astrology
- Advertisement -

கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் தான் சனிபகவான். இவர் கர்ம நாயகனாகவும் போற்றப்படுகிறார். மனிதன் தான் செய்யும் செயலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை பகிர்ந்து அளிப்பதில் நீதி தவறாமல் விளங்கக் கூடியவர் தான் இந்த சனி பகவான். அப்படியான சனி பகவானால் யோகம் பெறக் கூடிய ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் யோகம் பெரும் ராசிகள்

கிரகங்களிலே மெதுவாக நகரக் கூடியவர் இந்த சனி பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அப்படியான சனி பகவான் கடந்த மாதம் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெயர்ச்சி அடைந்தார். இது இந்த வருடம் முழுவதும் அப்படியே தொடரும்.

- Advertisement -

இந்த நிலையில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். இது பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களை பொறுத்த வரையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் சனியின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக மாறி உள்ளது. அவற்றை இப்போது பார்க்கலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் நட்சத்திர பெயிற்சியானது இந்த ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் உங்களை தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

ரிஷப ராசி

சனியின் இந்த நட்சத்திர பெயிர்ச்சி உங்களுக்கு பல சிறப்பான பலன்களை கொடுக்கவிருக்கிறது. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுடன் வேலை செய்யும் இடத்தில் நற்பெயரும் கிடைக்கும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. புதிதாக வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலம் நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் கை கூடும்.

மிதுன ராசி

சனியின் இந்த நட்சத்திர மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குத் தான் என்றே சொல்லலாம். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உடன் வேலை செய்வார்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் பாதிப்பிற்கு உள்ளாகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்டவையே இந்த பதிவில் உள்ள தகவல்கள். அவரவர் கர்ம வினைகள், ஜாதக, கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதிலும் சில மாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு என்ற தகவலை சொல்லிக் கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -