தொட்டதெல்லாம் வெற்றி அடைய வேண்டுமா? தீபத்தின் முன்பு 9 முறை இப்படி சொல்லி பாருங்கள்!

vetri deepam

மனிதர்களாக பிறந்த  ஒவ்வொருவருமே, தொட்ட காரியம் எல்லாம் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். என்ன செய்வது? தோல்விதான் வெற்றிக்கு முதல்படி, என்பதை நம்மில் பலர் மறந்து விட்டோம். தோல்வி அடையாமல் வெற்றியை தொட்டுவிட்டால், வெற்றியின் சுவையை நம்மால் முழுமையாக உணர முடியாது. எனவே தோல்வி அடைந்தாலும் கூட, துயர் அடையாமல் வெற்றியை நோக்கி செல்ல என்ன வழி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து, வாழ்க்கையில் அடுத்தடுத்த படிக்கு சென்று கொண்டே இருக்கவேண்டும். இதுதான் மனித வாழ்க்கையின் இயல்பு. இதைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள். ஆகவே தோல்வியைக் கண்டு பயப்படாமல், வெற்றியை நோக்கி செல்ல என்ன செய்யலாம்? இதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

deepam

வெற்றியின் பாதையில் நம்மை நாமே கொண்டு செல்ல, செய்யக்கூடிய பயிற்சிதான் இது. 15 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மண் அகல் தீபம், நெய், விளக்கு திரி இது மட்டும்தான். இந்த நேரத்தில் தான், இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் கூட இந்த பயிற்சியை செய்வது நல்ல பலனைத் தரும்.

அமைதியாக இருக்கும் ஒரு இடத்தில் அகல் விளக்கில், நெய் ஊற்றி, திரி போட்டு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு நிமிடம் மனதை அமைதிப்படுத்தி கொண்டு, தீபச்சுடரை நன்றாக பார்க்க வேண்டும். அதாவது அந்தச் சுடரை மட்டும்தான், அந்த நெருப்பை மட்டும் தான் உங்கள் கண்கள் உற்றுநோக்க வேண்டுமே தவிர, விலக்கை அல்ல. அதன் பின்பு கண்களை மூடி, நெற்றி பொட்டில், இரு புருவங்களுக்கு நடுப்பகுதியான, ஆக்னா சக்கரத்தில் தீபச்சுடரை நிறுத்த வேண்டும். அந்த தீபத்தின் பிம்பம், உங்களது நெற்றியில் இருபுருவங்களுக்கு நடுவிலே நிற்கும்படி, ஒரு நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.

deepam

பின்பு கண்களை திறந்து ஒரு நிமிடம் தீபத்தை உற்று நோக்கி விட்டு, மறுபடியும் கண்களை மூடி, இரண்டு புருவங்களுக்கு நடுவிலும் தீபச்சுடர் நிறுத்தி, ஒரு நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இதே போல் நான்கு முறை தொடருங்கள். அதன்பின்பு உங்களது இரண்டு கைகளையும், சாமி கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு, தீபச்சுடரை மனதார நினைத்து கொண்டு, உங்கள் மனதில் நினைத்திருக்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அது வெற்றி அடைய வேண்டும் என்று 9 முறை மனதிற்குள் சொல்ல வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை மட்டும்தான் வைக்க வேண்டுமே தவிர, பல குறிக்கோள்கள் இருக்கக் கூடாது.

- Advertisement -

தீபத்திற்கு கீழிருந்து மேல் நோக்கி எரியும் ஆற்றல் இருக்கிறது. அதை நாம் உற்று நோக்கும் போது அந்த காந்த சக்தியானது நமக்குள்ளும் இயக்கப்படும். இதன் மூலம் நம் உடம்பில் குண்டலினி சக்தி, கீழிருந்து மேல் நோக்கி எழுப்பப்படுகிறது. சாதாரண மனிதர்கள் தினந்தோறும் தவம் செய்து பலனை பெற முடியாது, என்பதற்காகதான் சுலபமான முறையில், தீபத்தை ஏற்றி வழிபடும் வழக்கத்தை நமக்கு தந்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.

deepam

மனிதனுக்கு குண்டலினி சக்தி மேல் நோக்கி எழும் போது நல்ல ஆற்றலை பெறலாம், என்ற காரணத்திற்காகத்தான் கோவில்களிலும், நம் வீடுகளிலும் தீபம் ஏற்றப்படும் வழிபாடானது தொடங்கப்பட்டது. நாம் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் இல்லாமல் இருப்பதில்லை. ஆழ்ந்து, ஆராய்ச்சி செய்யும்போதுதான் எல்லாமே ஒரு கட்டத்தில் நமக்கு புரிய வருகிறது. ஆகவே மனிதன் குண்டலினி சக்தியை தூண்டும் இந்த பயிற்சியை தினந்தோறும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எல்லோராலும் விரும்பப்படும் நபராக மாற்றப் படுவீர்கள். உங்களின் செயல்பாடுகள் விரைவில் வெற்றி அடையும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பயம் எது? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ninaithathu nadakka enna seivathu in Tamil. Kariyam vetri pera Tamil. Ninaithathu niraivera. Vetri pera tips. Vetri pera valigal.