நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

kungumam

பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடியே குங்குமம். இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்தால் குங்குமம் தயார். மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறம் கிடைக்கிறது.

kungumam

அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். இதை அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.

kungumam

தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

kungumam

குங்குமம் இட்டுக்கொள்வதால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம் என்பதற்கு குங்குமம் ஒரு மிக பெரிய சான்று என்றே கூறவேண்டும்.