போதிதர்மரின் பிறப்பிடத்தை தேடி படை எடுக்கும் சீனர்கள் – வீடியோ

Bodhidharma tamil

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
இன்று சீனா மற்றும் ஜப்பானில் கொடிகட்டி பறக்கும் கும்பூ கலைக்கு தந்தை நமது போதிதர்மர். இவர் சீனாவிற்கு வேறொரு நாட்டில் இருந்து வந்தார் என்பதை அந்நாட்டு மக்கள் நன்கு அறிவர். ஆனால் அவர் எங்கிருந்து வந்தார் அவருடைய தாய் தேசம் எது என்ற பல கேள்விகள் சீனர்களின் மனதில் எழ துவங்கியது. இது குறித்து பல ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் அதை கண்டறிந்தனர். இதோ அதன் வீடியோ.

போதிதர்மர் தமிழகத்தில் இருந்த பல்லவ மன்னர்களின் பரம்பரையை சார்ந்தவர் என்பதை சீனர்களும் ஜப்பானியர்களும் பல ஆய்விற்கு பின்பு கண்டறிந்துள்ளனர். அதை அவர்கள் பல சான்றுகள் மூலம் உறுதி செய்தனர். போதிதர்மரை தேடி வருடா வருடம் சீனர்களும் ஜப்பானியர்களும் இங்கு வருகின்றனர். தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர்கள் தமிழை கற்க துவங்கியுள்ளனர். போதிதர்மர் காலத்து ஓலை சுவடிகள் பல அவர்களிடம் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதை படித்து அதில் உள்ள அறிய தகவல்களை புரிந்துகொள்ள அவர்களுக்கு தமிழ் மொழி தேவை படுகிறது. ஆகையால் அவர்கள் தமிழை பேரார்வத்துடன் கற்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் காஞ்சிபுரத்தில் போதிதர்மருக்கு ஒரு நினைவிடம் எழுப்பக்கூடும் என்று தெரிகிறது.