- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தின் அருளை பெற ஆடி வெள்ளி வழிபாட்டு முறை

குலதெய்வத்தின் அருளை பெற ஆடி வெள்ளி வழிபாட்டு முறை

- Advertisement -

ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது எவ்வளவு சிறப்பு மிகுந்தது என்று அனைவருக்குமே தெரியும். நாளைய தினம் ஆடி இரண்டாம் வெள்ளி. எப்பொழுதும் போல் அம்மனை நாம் வழிபடுவதோடு குலதெய்வத்தையும் சேர்த்து வழிபட குலதெய்வம் மற்றும் அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த எளிமையான வழிபாட்டை செய்வதன் மூலம் குலதெய்வம் மனமகிழ்ந்து நம் வீட்டிற்கு வந்து அருள் ஆசி புரிவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த எளிமையான வழிபாட்டு முறையை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி வெள்ளி வழிபாட்டு முறை

ஒரு தெய்வத்தின் அருளை நாம் பரிபூரமாக பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக முறையில் குலதெய்வத்தின் அருளை நாம் பெற வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் எந்தவித சுப காரியங்களும் நடைபெறும். குலதெய்வம் நமக்கு உறுதுணையாக இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் தகர்த்தெறியப்படும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடி இரண்டாம் வெள்ளி அன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் நாளைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 6 – 10 மணிக்குள்ளோ அல்லது மாலை 6 – 8:30 மணிக்குள்ளோ செய்து விட வேண்டும். சுவாமி படங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் விக்ரகம் வைத்து வழிபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளைய தினம் பால் அபிஷேகம் செய்து அவர்களுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே பச்சரிசியை கொட்டி கொள்ள வேண்டும். அந்த பச்சரிசிக்கு மேல் ஒரு தேங்காயை எடுத்து அதை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துவிட்டு தேங்காய் முழுவதும் மஞ்சளை தடவி தேங்காயை சுற்றி மூன்று இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். இந்த தேங்காயை பச்சரிசியின் மேல் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கலுடன் சேர்த்து இரண்டு வகையான சாதங்களை வைக்க வேண்டும். பிறகு இளநீர், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, இதனுடன் ஏதாவது ஒரு தானியத்தில் செய்யப்பட்ட கூழையும் வைக்க வேண்டும். அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் வேப்பிலையையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டுவிட்டு வாசனை நிறைந்த மலர்களால் அம்மனின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு பிரசாதத்தை அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சிறிய பெண் குழந்தைகோ அல்லது வயது முதிர்ந்த சுமங்கலிகோ கொடுக்க வேண்டும். பிறகு தான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில் வழிபாட்டிற்கு வைத்த தேங்காய் மற்றும் பச்சரிசியை எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி நாம் தேங்காயை வைத்து வழிபாடு செய்யும் பொழுது அந்த தேங்காயில் அம்மனின் அருளும் அதேசமயம் குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக வீற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தடைகள் விலக பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தேங்காய் வழிபாட்டை நாளைய தினம் முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் என்பதோடு மட்டுமல்லாமல் குலதெய்வம் மற்றும் அம்மனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்