வீட்டில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்! வருமானம் தடைபடும்.

thulasi-cash

துளசி செடி என்பது பவித்ரமான தெய்வீக செடியாக இந்து மத சமுதாயத்தில் சொல்லப்பட்டு வந்துள்ளது. தெய்வீகத் தன்மை உள்ள இந்தச் செடி வகையை மகாலட்சுமிக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. துளசி தேவி தான் மகாலட்சுமியாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய பெருமைகள் நிறைந்துள்ள துளசி செடியை வீட்டில் வைப்பவர்கள் சில விஷயங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. சில விஷயங்களை செய்வது மிகவும் நல்லது என்பது போன்ற ஆச்சார, அனுஷ்டானங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய அறியப்படாத தகவல்களைத் தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thulasi

துளசியை பொறுத்தவரை மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சாதாரண துளசியானது சிறு சிறு இலைகளையும், பெரிதான இலைகளையும் கொண்டதுமாக இரண்டு வகையும், கருந்துளசி என கூறப்படும் மற்றொரு வகையும் இருந்து வருகிறது. இதில் சாதாரண துளசியாக இருக்கும் சிறு சிறு இலைகளை கொண்டவை மகாலட்சுமிக்கு இணையானவை. இந்தச் செடியை துளசி மாடத்தில் வைத்து வளர்ப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.

துளசிச் செடியை தெய்வீக ஆற்றல் படைத்ததாக கருதப்படுவதால் அவற்றை மண் தொட்டிகள் அல்லது மண் சார்ந்த பொருட்களில் வளர்ப்பது தான் மிகவும் நல்லது. சாதாரண பிளாஸ்டிக் கவர் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். இதனால் லக்ஷ்மி தேவிக்கு கோபம் வந்துவிடுமாம். வேறு எந்த வகையான பொருட்களிலும் துளசிச்செடி வைக்க கூடாது. துளசி மாடத்தில் வைப்பது மிகவும் நல்ல பலன் தரும். துளசியை பொறுத்தவரை தினமும் சுத்தமான தண்ணீரை ஊற்றி வருவதன் மூலம் வீட்டில் ஏற்படக் கூடிய வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

thulasi

துளசிச் செடிக்கு பாலபிஷேகம் செய்வது சொர்ண ஆகர்ஷன சக்தியை கொடுக்கும். அதாவது வீட்டில் பொன், பொருள் சேர்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். மகாலட்சுமிக்கு நீங்கள் செய்யும் அபிஷேகமாகவே துளசி செடிக்கு செய்யும் பொழுதும் பார்க்கப்படுகிறது. துளசி, வில்வம் போன்ற தெய்வீக செடிகளைத் தவிர மற்ற செடி வகைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்க்கவும்.

- Advertisement -

துளசி செடியை உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள். வீட்டில் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது முதல் வழிபடுவது வரை மேற்கொள்ளும் துளசி செடியை மற்றவர்கள் தொட்டுப் பார்ப்பதும் தோஷமாக கருதப்படுகிறது. துளசிச் செடியின் இலைகளை தேவையில்லாமல் பறிக்கவும் கூடாது.

Thulasi

நீங்கள் தீர்த்தம் வைக்க, பூஜைகள் செய்ய பயன்படுத்துவதாக இருந்தால் ஒழிய வீட்டில் வளர்க்கப்படும் துளசியை அடிக்கடி பறிப்பது கூடாது. அது போல் துளசி செடி நன்றாக செழித்து வளர்வதற்கு அதில் இருக்கும் விதைகளை அடிக்கடி உருவி அந்த செடிக்கே உரமாக போட்டு விட வேண்டும். துளசி செடியை காடு போல் அடர்த்தியாக வளர்க்கக் கூடாது. ஒரு அளவிற்கு மேல் துளசி செடி வளர வளர அதை அழகாக வெட்டி கொண்டே வர வேண்டும்.

thulasi chedi

துளசி செடியை தினமும் மும்முறை வலம் வருவது சிறப்பான பலன்கள் தரும். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்க இவ்வாறு மும்முறை வலம் வருவதை எப்போதும் செய்யுங்கள். காலையில் இல்லை என்றாலும் மாலை வேளையில் துளசிச் செடிக்கு விளக்கு ஏற்றுவது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை போற்றுவதாக அர்த்தமாகிறது. துளசிச் செடிக்கு நீங்கள் இவ்வாறு செய்வதால் பணம் பல வழிகளிலும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. ஆகவே மேற்கூறிய அதை கடைப்பிடித்தும், தவிர்க்க வேண்டியதை தவிர்த்தும் துளசி செடியை போற்றி, வணங்கி, வளர்த்து வாருங்கள் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.