தோப்புக்கரணம் போடுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

thopukaranam-1

ஆதி தமிழனின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் ஒரு மிக பெரிய அறிவியல் ஒளிந்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், நாம் ஏன் தோப்புகரணம் போடவேண்டும் என்பது பற்றியும் அதை ஏன் குறிப்பாக பிள்ளையார் சிலை முன்பு போடுகிறோம் என்பது பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பாப்போம் வாருங்கள்.

சுமார்  200 ஆண்டுகளாக தான் தமிழர்களாகிய நாம் நவீன மருத்துவத்திற்கு மாறியுள்ளோம். அனால் அதற்கு முன்பு சுமார் 5000 வருடங்களுக்கு மேலாக, நாம் நோய் வராமல் வாழ்வது எப்படி என்ற வாழ்வியல் முறையை அறிந்து அதன் படி தான் வாழ்ந்துவந்தோம்.

உதாரணத்திற்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு கோயிலிற்கு போவதை தமிழன் வழக்கமாக வைத்திருந்தான். எந்த கோயிலிற்கு சென்றாலும் அங்கு பிள்ளையார் தான் முதலில் இருப்பார். அவருக்கு முன்பு சில தோப்புக்கரணங்கள் போட்டுவிட்டு அதன் பிறகு  கோவிலில் உள்ள மற்ற கடவுள்களை வணங்க செல்வது வழக்கம்.

Pillayar

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர்.

- Advertisement -

இடதுகையை கொண்டு வலது காதையும் வலது கையை கொண்டு இடது காதையும் பிடித்து உட்கார்ந்து எழும்பொழுது
முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. “ஆட்டிஸம்’ போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபட கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இப்படி பல அற்புதங்களை தரக்கூடிய இந்த தோப்புக்கரணத்தை தான் நம் முன்னோர்கள் அன்று பிள்ளையார் முன் போட்டார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் தோப்புக்கரணத்தை போட்டுவிட்டால் மூலை புத்துணர்வு அடைந்து அங்குள்ள நேர்மறையான ஆற்றல் திறன்களை எளிதாக கிரகிக்க ஆரமிக்கும். இதனால் அந்த நாள் முழுவதும் மனதும் அறிவும் தெளிவாக இருக்கும். இதுவே பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதற்கான அறிவியல் உண்மை.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் செல்வம் சேருவதற்கான எளிய பரிகாரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we described Thoppukaranam uses in Tamil and how to put Thoppukaranam(Thoppukaranam poduvathu eppadi). Thoppukaranam benefits are enormous. It helps for weight loss and brain development.