உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட வேண்டுமா? இந்த குறிப்புகளை பின்பற்றி தான் பாருங்களேன்!

panam

‘இதை செய்தால் தவறு’ என்று தெரிந்திவிட்டால் ஒரு விஷயத்தை நாம் கட்டாயமாக செய்ய மாட்டோம். இது தவிர வளர்ந்துவரும் இந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் ‘இப்படி செய்தால் நல்லது’ ‘இப்படி செய்தால் கெட்டது’ என்பதை தெரிந்து கொள்வதற்கு நமக்கு எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. அந்த தொழில் நுட்பங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கையில், நமக்குத் தகுந்தவாறு செயல்படுத்திக் கொண்டால் அதிகப்படியான நன்மையை அடைய முடியும். இந்தப் பதிவின் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கும் சில நல்ல விஷயங்களையும், வாஸ்து குறிப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்துமே சின்ன சின்ன குறிப்புகள் தான். முடிந்தவர்கள் முடிந்ததை பின்பற்றித்தான் பாருங்களேன்!

vasthu

உங்களது வீட்டில் பணமானது தொடர்ந்து விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அதை எடுத்து வைக்க முடியவில்லை. சேமிப்பு என்பது ஒரு துளி கூட இல்லை என்றால், விரையத்தோடு விரயமாக சேர்த்து ஒரு புதிய தங்க மோதிரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். அதை வியாழக்கிழமை அன்று வாங்கி உங்களது ஆள்காட்டி விரலில் முதலில் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக புதிய மோதிரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தங்கம் விற்கும் விலையில் புதிய மோதிரமா? என்று சிந்திக்காதீர்கள். இது உங்களுக்கு முதல் வரவு.

நம் முன்னோர்கள், ஒரு புதிய  வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக இனிப்பு சாப்பிடவேண்டும் என்று ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்கள். ஆனால் அந்த இனிப்பு என்பது சாக்லேட், வெள்ளை சர்க்கரை, அல்லது இனிப்பு வகைகள் இவைகள் எதற்குமே பொருந்தாது. வெல்லம், நாட்டு சர்க்கரை இவைகளை சாப்பிட்டால்தான் பலனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வெல்லத்திற்கு நல்ல சக்தியை தூண்டும் ஆற்றல் இருக்கிறது. வெல்லம் நம்முடைய உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டது. எனவே நல்ல காரியத்திற்கு செல்லும் போது மட்டுமல்லாமல், தினம் தோறும் நாம் காலையில் வெளியில் செல்வதற்கு முன்பு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டாலும் அதிகப்படியான நன்மையை நம்மால் பெற முடியும். நம் உடல், ஆற்றல் மிக்கதாக இருந்தாலே போதும். நாம் செல்லும் காரியம் வெற்றி தான்.

vellam

முடிந்தவரை உங்களது வீட்டின் அலமாரிகளில் பழைய பேப்பரை போட்டு, அதன் மேல் பொருட்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதம், கலர் காகிதம் அல்லது பழைய துணிகள் இவைகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இது ஒரு முக்கியமான குறிப்பு. முடிந்தவர்கள் இதை பின்பற்றலாம். வடமாநிலத்தவர்கள் இதை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அதிக பணம் படைத்தவர்கள், பெரிய பணக்காரர்களது வீட்டிலிருந்து, கொஞ்சமாக மண்ணை எடுத்துவந்து, அந்த மண்ணில் நம் வீட்டில் தொட்டியில் வைத்தோ அல்லது வீட்டின் முன்பக்கத்தில் சின்னதாக ஒரு செடியை வளர்த்து வரலாம். இதில் எந்த ஒரு மாய மந்திர வித்தைகளும் இல்லை. அவர்களது அதிர்ஷ்டத்தை நாம் எடுத்து வந்ததாகவும் அர்த்தமில்லை. அதாவது வசதி படைத்தவர்களது வீட்டில் இருக்கும் அந்த நல்ல ஆற்றலை, நம்முடைய வீட்டிலும் வைக்கின்றோம். அவ்வளவுதான். வசதிபடைத்தவர்களது வீட்டிலிருந்து மண்ணை திருடிக்கொண்டு வந்து எல்லாம் வைக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், சிறிதளவு மண்ணை கேட்டு எடுத்துவந்து நீங்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது குலதெய்வக் கோவில் அல்லது சக்திவாய்ந்த பெரிய பெரிய கோவில்களில் இருந்து மண்ணை எடுத்து வந்து சிலர் வீட்டில் வைத்துக் கொள்வார்கள் அல்லவா! அதே போல் இதுவும் ஒரு சின்ன பரிகாரம் தான்.

Mun

உங்களது வீட்டின் கழிவறை தென்கிழக்கு மூலையில் கட்டாயம் இருக்கக் கூடாது. முடிந்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இதை மாற்றி அமைக்க முடிந்தால் மாற்றிவிடலாம். முடியாதவர்கள் ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான இந்துப்பை வாங்கி நிரப்பி கழிவறை அலமாரியிலோ அல்லது ஜன்னலோரத்தில் வைத்துவிடலாம்.

முடிந்தவரை தெற்கு பக்கமாக பார்த்து உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதில் அறிவியல் பூர்வமான ஒரு உண்மையும் இருக்கிறது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் சீக்கிரமாக ஜீரணமாகாது. உடல் மந்தமாகவே இருக்கும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. இதுவே நமக்கு ஆரோக்கியத்தில் ஒரு குறையாக ஏற்பட்டு விடலாம்.

food

முக்கியமாக உங்கள் வீட்டு பூஜை அறையானது குளியலறை சுவற்றை ஒட்டிய படியோ, கழிவறை சுவற்றை ஒட்டிய படியோ இருக்கக்கூடாது. அதாவது சுவாமி படங்கள் வைத்திருக்கும் சுவருக்கு பின்னால் கழிவறை இருப்பது தவறான ஒன்று என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இதைத் தடுக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்கள் முடிந்தவரை மாற்றிக்கொள்ளலாம். வாடகை வீட்டில் இருப்பவராக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவராக இருந்தாலும் இப்போது அலமாரிகள் வாங்கி அதில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு வழி இருக்கின்றது. அது போல் பூஜை அறையை இடம் மாற்றி வைத்துக்கொள்வது நன்மை தரும்.
இதையும் படிக்கலாமே:
உங்களது வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள 1 தேங்காய் போதும்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.