குன்றின் மணியைப் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்.

Kundrimani

குன்றின் மணி என்றால் என்ன? இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற சந்தேகங்கள் இன்றளவும் பலருக்கு இருந்துதான் வருகிறது. பழங்காலங்களில் குன்றின் மணியானது காடுகளில் இயற்கையாகவே வளரக்கூடிய ஒரு தாவரமாக இருந்தது. நாகரீகம் வளராத காலங்களிலிருந்தே பழங்குடியினர் இதனை தங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்ற நம்பிக்கைகள் எல்லாம் குறைந்து கொண்டுதான் வருகின்றது. நம்மில் சில பேர் இதையெல்லாம் நம்புவதே இல்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் வசித்து வந்த மக்கள் கெட்ட சக்திகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள். அவர்கள் தங்களை கெட்ட சக்திகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காக இந்த குன்றின் மணிகளை வைத்து பல பூஜைகளை செய்து, பல நல்ல சக்திகளை அதனுடன் சேர்த்து தன் பாதுகாப்பிற்காக வைத்து வந்தார்கள். இப்படியாக அந்த பழக்கமானது நம் முன்னோர்களால் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆன்மீகத்தில் நல்ல அனுபவம் உடையவர்கள் இன்றளவும் இந்த குன்றின்மணியை தங்களது வீட்டில் வைத்து பூஜை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் இதை தங்களது வீட்டில் வைத்திருந்தாலும் வெளியில் மற்றவர்களிடம் இதன் அருமை பெருமைகளை பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை.

Kundrimani

12 வண்ணங்களில் குன்றின் மணிகள் கிடைக்கும். ஆனால் இதில் தற்சமயம் கருப்பு சிகப்பு சேர்ந்த குன்றின் மணி, வெள்ளை, சுத்தமான சிகப்பு, பச்சை, கருப்பு இந்த  நான்கு வண்ணங்களிலும் குன்றின் மணிகள் புழக்கத்தில் உள்ளன.

கருப்பு வண்ணத்தையும் சிகப்பு வண்ணத்தையும் ஒன்றாக சேர்த்தால் போல் இருக்கும் குன்றின் மணியை நாம் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று மண் பிள்ளையாருக்கு கண்ணாக இதை வைப்பார்கள். கிராமப்புறங்களில் விலையும் இந்தக் குன்றின் மணிக்கு சக்தி அதிகம் உள்ளது என்பதை நாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம் வீட்டில் பணக் கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணியை நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். வீண் விரயங்களையும் தவிர்க்கும் சக்தியானது இந்த சிகப்பு கருப்பு குன்றின் மணிக்கு உள்ளது.

Kundrimani

கருப்பு குன்றின் மணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகின்றது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பின் குன்றின் மணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அந்த காளியின் அம்சமாக கருப்பு குன்றின் மணி கருதப்படுகிறது. இதை நம் வீட்டில் வைத்திருந்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. பிறரால் நமக்கு வைக்கப்படும் பில்லி சூனியங்கள் நம்மளை தாக்காது. மந்திர தந்திரங்கள் செய்பவர்கள் இன்றளவும் இந்த குன்றின் மணியை பயன்படுத்தி வருகின்றார்கள். இதை தாயத்தாக குழந்தைகளுக்கு கழுத்தில் அணிவித்தால், திருஷ்டியும், கெட்ட சக்தியும் அண்டவே அண்டாது.

- Advertisement -

வெள்ளை குன்றின் மணி அந்த அம்பாளின் அம்சமாக வழிபடுகிறார்கள். தொடர்ந்து தோல்வியை சந்திப்பவர்கள் இந்தக் குன்றின் மணியை தன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றியை அடையலாம். தொழிலில் தோல்வி இருந்தாலும், படிப்பில் தோல்வி இருந்தாலும், எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் சக்தி இந்த வெள்ளை குன்றின் மணிக்கு உள்ளது.

Kundrimani

சுத்தமான சிகப்பு வர்ணத்தை உடைய குன்றின் மணியானது எளிதாக நமக்கு கிடைக்காது. அடர்ந்த காடுகளில் மட்டுமே விளையக்கூடிய இந்தக் குன்றின் மணி எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி உடையது. சிலர் எந்த நேரமும் நமக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ அல்லது நம்மை சேர்ந்தவருக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற நினைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களது இந்த எதிர்மறையான எண்ணத்தை மாற்ற இந்த சிகப்பு குன்றின்மணி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இதனை வைத்திருப்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மற்ற எந்தத் தீட்டும் அண்ட கூடாது. தீட்டு ஏற்படும் சமயத்தில் இதை பூஜை அறையில் வைத்து விடலாம்.

Kundrimani

பச்சைக் குன்றின் மணியானது கிடைப்பது மிகவும் அறிது. இதை வைத்து குபேர பூஜை செய்துவந்தால் பணவரவு அதிகரிக்கும். ஆனால் பச்சை குன்றின் மணியானது காய்ந்து விட்டால் அதன் பலன் குறைந்து விடும்.

சாயம் பூசப்பட்ட குன்றின் மணிகள் கடைகளில் போலியாக விற்கப்படுகின்றன. இதனால் எது உண்மையான குன்றின் மணி என்பதை அறிந்து நம்பிக்கையானவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் சந்ததியினரே பசியில்லாமல் வாழ இதை செய்தால் போதும்.

English Overview:
Here we have Kundrimani benefits in Tamil. Kundrimani uses in Tamil. Kundrimani payangal in Tamil. Kundrimani palangal in Tamil.