ராமர் பாலத்தை பற்றி பலரும் அறியாத சில திடுக்கிடும் உண்மைகள்

ramar-palam3

ராமர் பாலம் – இது உண்மையா, பொய்யா என்று பலரும் விவாதித்துக்கொண்டிருக்கும் நிலையில் இது உண்மை தான் என்று சில ஆதாரங்களோடு கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

ram sedhu

அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கிட்டதட்ட 17 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. 17 லட்சம் ஆண்டுகளை கடந்து இன்றும் கடலுக்குள் அந்த பாலம் இருக்கிறது என்றால் அதன் கட்டுமானம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்று யூகித்து பாருங்கள்.

30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்ட இந்த பாலம் வெறும் ஐயந்தே நாட்களால் கட்டிமுடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. நலா என்கிற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி ஒரு கோடி வானரங்களின் உதவியோடு கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இது.

ramar palam

இந்த பாலத்தை கட்ட, மிதக்கும் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றும் ராமேஸ்வரம் கடற்பகுதியில் மிதக்கும் கற்கள் தென்படுகிறது. அதற்கான வீடியோ ஆதாரம் இதோ.

கி.மு.1480 க்கு முன்பு வரை இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இதன் வழியாகவே மக்கள் இலங்கைக்கு நடந்து சென்றுள்ளனர் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். அதன் பின்னர் ஏற்பட்ட சுனாமி போன்ற கடல் சீற்றத்தால் இந்த பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த பாலத்திற்கு ஆதாமின் பாலம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த பாலம் இருக்கும் பகுதியில் கடலின் ஆழம் வெறும் 3 முதல் 30 அடி வரையே உள்ளது.