எதையும் சாதிக்கும் மனோசக்தி பெற சாய் பாபா மந்திரம்

Sai-baba-1-5

மனிதனிடம் இருக்கின்ற ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு விஷயம் தான் “மனம்”. அந்த மனதை சரியான முறையில் பயன்படுத்தும் போது எந்த ஒரு மனிதனும் தெய்வீக நிலையை அடைய முடியும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவர்களுக்கு இன்பங்கள் ஏற்படும் போது மகிழ்வதும், துன்பங்கள் ஏற்படும் போது துவண்டுபோவதும் என தங்களின் மனோசக்தியை வீணடிக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் திடமான, எதையும் சாதிக்கும் மனதைப் பெற “ஸ்ரீ சாய் பாபா மந்திரம்” அதை ஜெபிக்கலாம்.

Sai baba

சாய் பாபா மந்திரம் :

ஓம் சாய் சத் சித்
ஆனந்த் ஸ்வரூபாய நமஹ

எனும் “ஸ்ரீ சாய் பாபாவிற்குரிய” மந்திரத்தை தினமும் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கூறி வரவேண்டும். மேலும் சாய் பாபாவிற்குரிய வியாழக்கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்தவுடன் ஸ்ரீ சாய் பாபாவின் படம் வீட்டிலிருக்கும் பட்சத்தில் அப்படத்திற்கு முன்பு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ஏதேனும் ஒரு பழம் அல்லது பருப்புகள் அல்லது சில கற்கண்டுகளை அவருக்கு நிவேதனம் அளித்து, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் சாய் பாபா நிறைவேற்றி தருவார். மேலும் இன்பங்களிலும், துன்பங்களிலும் சமநிலை இழக்காத மனோதிடத்தையும், ethaium சாதிக்கும் துணிவையும் “ஸ்ரீ சாய் பாபா” அருள்வார்.

இதையும் படிக்கலாமே:
நினைத்ததை நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்

English Overview:
Here we have Sai baba mantra in Tamil. By chant this mantra one can get strong heart so that one can face any kind of problem and one can lead happy life.