டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிற்கும் வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு – சேவாக் பதிலை பாருங்கள். அட செம போங்க

sehwaq

இந்திய அணியின் எவர்கிரீன் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் இவரின் அதிரடிக்கு இந்திய அணி ரசிகர்கள் மயங்கி இருந்தனர். டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் கூட பவுண்டரி அடிக்கும் இவரது பேட்டிங் அலாதியான ஒரு ரகமாகும்.

Sehwag

இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 251 ஒருநாள் போட்டிகளில் சேவாக் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 319 ரன்களையும் நடித்துள்ளார். உலகின் பல ஆபத்தான பந்துவீச்சாளர்களை எளிதாக அடித்து நொறுக்கியுள்ளார்.

ஒருமுறை பத்திரிக்கை நிருபர் ஒருவர் சேவாக்கிடம் ஒருநாள் போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கேட்க அதற்கு பதிலளித்த சேவாக் : பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் மெதுவாக மைதானத்தை அறிந்தும், ஒருநாள் போட்டிகளில் சிறிது வேகமாகவும் பேட்டிங் ஆடுவார்கள். ஆனால், எனக்கு அப்படி ஏதும் இல்லை.

Sehwaq v

இரண்டு வடிவ கிரிக்கெட்டுக்குமே ஒரு வித்தியாசம் தான். டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை நிற சீருடையில் ஆடுவேன். ஒருநாள் போட்டிகளில் நீல நிற சீருடையில் ஆடுவேன் இது மட்டுமே வித்தியாசம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இவரே 3ஆம் இடத்தில் இறங்குவார் – ரவி சாஸ்திரி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்