முதல் பந்தில் 6, இரண்டாவது பந்தில் 4, அடுத்த பந்தை உள்ளே போடச்சொன்ன தல தோனி. பேட்ஸ்மேனை தூக்கிய புவி – வீடியோ

Bhuvi

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

Team

முதல் போட்டியில் அதிரடியில் மிரட்டிய செபர்ட் இந்தப்போட்டியில் ஆரம்பத்தில் அதிரடி காட்ட துவங்கியதும் இந்திய அணி பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் அவரை 12 ரன்னில் வெளியேற்றினார். செபர்ட் 12 பந்தில் 12 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய குமார் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் செபர்ட். அடுத்த பந்து பவுண்டரி அதன்பின் மூன்றாவது பந்து கீப்பர் தோனியிடம் கேட்ச் ஆகி அதிர்ச்சியுடன் வெளியேறினார் செபர்ட் இதோ அந்த வீடியோ இணைப்பு :

தற்போது நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை அடித்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே :

அம்பயரின் தவறான முடிவினால் வெளியேறிய நியூசி வீரர் – களத்திலேயே கோபப்பட்ட வில்லியம்சன் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்