அம்பயரின் தவறான முடிவினால் வெளியேறிய நியூசி வீரர் – களத்திலேயே கோபப்பட்ட வில்லியம்சன் – வீடியோ

williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

Tim seifert

சென்ற முதல் போட்டியில் மிரட்டிய செபர்ட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து 6 வது ஓவரை வீச வந்தார் குருனால் பாண்டியா அந்த ஓவரில் மூன்ரோ, மிட்சல் ஆகியோர் ஆட்டமிழக்க செய்தார்.இதனால், நியூசிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

இதில் மிட்சல் எல்.பி. முறையில் அவுட் ஆனார். ஆனால் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தும் அம்பயர் அவுட் கொடுத்தார். இதனால் கோபமடைந்த வில்லியம்சன் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக :

Advertisement

இறுதியில் மீண்டும் அம்பயர் அவுட் என்று உறுதி செய்ததும் வருத்தத்துடன் வெளியேறினார் மிட்சல். தற்போது நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 129 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு. நியூசி அணியை முதல் 6 ஓவரிலேயே பழி வாங்கிய இந்திய அணி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்