- Advertisement -

செய்வினை ஏவல் கண்டறிய

- Advertisement -

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற விஷயங்களை எல்லாம் முழுமையாக இல்லை என்றும், இருக்கிறது என்றும் கூற முடியாமல் இருக்கிறது. அந்த காலத்தில் காத்து, கருப்பு அண்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுவார்கள். உச்சி வெயிலில் குழந்தைகளை வெளியில் அனுப்ப மாட்டார்கள். சுடுகாடு பக்கம் நடக்காதே என்பார்கள். இவனைத்தும் ஒரு விதமான எதிர்மறை ஆற்றல்களை குறிக்கிறது. இந்த ஆற்றல்கள் நமக்கு வேலை செய்தால் என்னென்ன மாதிரியான அறிகுறிகள் வரும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் அறிய இருக்கிறோம்.

செய்வினை, ஏவல் இருப்பவர்கள் பூஜை செய்யும் பொழுது விளக்கு அடிக்கடி அணையும். ஏற்றி வைத்த விளக்கு காற்று இல்லை என்றாலும், வேகமாக அசைந்தாடும். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஒரு விதமான வித்தியாசமான வாசனை வரும். கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்தால் தேங்காய் அழுகி போகும். இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் செய்வினை, ஏவல் போன்ற எதிர்மறை விஷயங்கள் உங்களிடம் இருப்பதாக அனுமானம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக நீங்கள் சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி இருப்பதை நீங்கள் கண்டறிய கூடும். வீட்டிலும், உங்களை சுற்றி உள்ள இடங்களிலும், தரை பகுதிகளில் முடிகள் ஆங்காங்கே தென்படும். காற்றில் முடிகள் சுற்றிக் கொண்டே இருக்கும். பொதுவாகவே வீட்டில் முடிகள் காற்றில் அலைந்தால், அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் பெருக ஆரம்பிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. தலை வாரும் பொழுதும் முடிகளை ஆங்காங்கே அப்படியே போட்டு விடக்கூடாது. முடியை நன்கு சுற்றி ஒரு பேப்பரில் மடித்து குப்பையில் போடலாம். காற்றில் அலைந்து பறந்து கொண்டிருக்கும் உங்கள் முடிகள் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உங்களை சுற்றி மின்சாரம் இருந்தால் அடிக்கடி அதில் பிரச்சனைகள் ஏற்படும். மின் வெட்டுவது போன்றவை அடிக்கடி நிகழும். எப்போதும் எலுமிச்சை வாசம் வரும். கெட்ட வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவீர்கள். உங்களுக்கு பழக்கம் இல்லை என்றாலும், புதிது புதிதாக அமங்கலமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவீர்கள். மற்றவர்கள் மனம் நோகும்படி பேசுவீர்கள்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் நடக்கும். அன்னோன்யமாக இருந்தவர்கள் ரொம்பவும் மோசமான முறையில் நடந்து கொள்வார்கள். பொன் நகைகளை தூக்கி எறிவீர்கள். எதிர்மறை ஆற்றல் வீட்டில் இருந்தால், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை காண முடியும். செய்வினை, ஏவல்கள் இருந்தால் அடிக்கடி அடிபட்டு ரத்தம் வரும்படியான காயங்கள் உண்டாகும். பட்ட இடத்தில் படும் என்பார்கள். அது போல ஒரே இடத்தில் அடிக்கடி காயங்களால் அவதிப்படக் கூடும்.

இதையும் படிக்கலாமே:
கார்த்திகை மாதம் ஹனுமன் வழிபாடு

உடல் அசதியாக இருப்பது போல, மந்தமாக இருப்பது போலவும் அடிக்கடி தோன்றும். யாரோ அடித்தது போல சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள். சில சமயங்களில் நினைவு எங்கோ சென்று மேலே விட்டதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்போம். இது போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் நிவர்த்தியாகும்.

சற்று முன்