இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இதை விட சூப்பர் குருமா இருக்குமா என்ன? சேலத்து ஸ்பெஷல் சைவ குருமா ரெசிபி.

salna
- Advertisement -

சேலத்துக்கு குருமா என்று சொல்லப்படும் இந்த குகை குருமாவுக்கு எப்போதுமே தனி ருசி உண்டு. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டாக்கு சைட் டிஷ் ஆக இதை வைத்துக் கொள்ளலாம். சைவ குருமாவாக இருந்தாலும் ஏதாவது ஒரு கறி மசாலாவை வாங்கி இதில் சேர்த்துக் கொண்டால், அது நமக்கு வித்தியாசமான வாசத்தையும் சுவையையும் கொடுக்கும். சரி அந்த அசத்தலான ரெசிபியை நீங்க தெரிஞ்சுக்கோங்க. உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பெஷல் மசாலா அரவையை அரைக்க வேண்டும். அந்த மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 1/4 மூடி, முந்திரி – 8, சோம்பு – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 12, பொட்டுக்கடலை – 6 ஸ்பூன், ஏலக்காய் – 1, லவங்கம் – 2, பட்டை – 1, இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரவை அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 1 கொத்து போட்டு வெங்காயத்தை நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி பழங்களை நறுக்கி போட்டு நன்றாக வதக்குங்கள். இந்த இடத்தில் குரு மாவு தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், கறிமசாலா – 1 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

salna1

முந்திரிப் பருப்பும் பொட்டுக்கடலையும் அரவையில் நாம் சேர்த்திருப்பதால் இந்த குருமா கொதிக்க கொதிக்க திக்காக மாறும். தேவையான அளவு தண்ணீரை முன்னாடியே ஊற்றி விடுங்கள். நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வரவிடுங்கள். அதன் பின்பு மீண்டும் 1 ஸ்பூன் கறிமசாலா தூள் சேர்த்து குருமாவை நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் பச்சை வாடை போக நன்றாக கொதித்து வர வேண்டும்.

- Advertisement -

குருமா நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். அப்போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். இட்லி தோசை பரோட்டாவுக்கு இதைவிட தொட்டுக்கொள்ள ருசியான குருமா இருக்குமா என்ன? நீங்களே ட்ரை பண்ணி பாருங்க.

salna

பின்குறிப்பு: மட்டன் கறி மசாலா, சிக்கன் கறி மசாலா, உங்களுக்கு கடைகளில் கிடைக்கும். எந்த வாசம் உங்களுக்கு அதிகமாக பிடிக்குமோ அதை இந்த குருமாவில் சேர்த்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -