இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் மகாசிவராத்திரி நாளன்று ஏதாவது ஒரு விதத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த மகா சிவராத்திரி நாளன்று நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நம் வாழ்க்கையில் எண்ணில் அடங்காத நன்மைகளை ஏற்படுத்தித் தரும் என்றே கூறப்படுகிறது. தெரியாமல் செய்யக்கூடிய ஏதாவது ஒரு நன்மையாக இருந்தாலும் அதனால் நமக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று நம்முடைய புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
சாதாரண ஒரு எலி தெரியாமல் ஒரு திரியை தூண்டி விட்டதால் அடுத்த பிறவியில் ராஜாவாக பிறந்தார் என்றும், தெரியாமல் செய்த வில்வ அர்ச்சனைக்கு சிவலோக பதவி கிடைத்தது என்றும் பலவிதமான கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு எந்த முறையில் அர்ச்சனை செய்தால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ கடாட்சம் ஏற்பட அர்ச்சனை
சிவபெருமானுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு ராத்திரி என்றால் அது சிவராத்திரி தான். அன்றைய நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அதே நாளில் தான் குலதெய்வ வழிபாட்டையும் பலரும் செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்றைய நாளில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்வதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் பலவிதமான பொருட்களை வாங்கி தருவார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும். சரி செல்வ செழிப்பு ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய அர்ச்சனையை பற்றி தெரிந்து கொள்வோம்.
நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றுதான் பலரும் வேண்டுதலை முன் வைப்பார்கள். அப்படிப்பட்ட செல்வ செழிப்பு உயர்வதற்கு மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனையை குறிப்பாக இரவு 11:30 மணியிலிருந்து 1 மணிக்குள் செய்தோம் என்றால் அதற்கு அளவில்லாத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டிலிருந்தாலும் ஆலயத்தில் இருந்தாலும் இந்த முறையில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் கண்டிப்பான முறையில் வில்வ இலைகளை வாங்கி தருவதன் மூலம் சிவபெருமானின் அருளை நம்மால் பெற முடியும் என்று அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வில்வ இலைகளை 108 என்ற எண்ணிக்கையில் சேகரித்து வைத்து ஒவ்வொரு வில்வ இலையிலும் சந்தனத்தால் ஸ்ரீ ராமா என்று எழுத வேண்டும். இப்படி நாம் ஸ்ரீ ராமா என்று ஒவ்வொரு வில்வ இலையிலும் எழுதும் பொழுது அது மொத்தமாக 324 முறை ஸ்ரீ ராமா எழுதுவது போல் இருக்கும். அப்படி பொறுமையுடன் நிறுத்தி நிதானத்துடன் சந்தனத்தால் வில்வ இலை குச்சிகளை வைத்தோ அல்லது துளசி இலை குச்சிகளை வைத்தோ ஸ்ரீ ராமா என்று எழுதிக் கொள்ளுங்கள்.
எழுதிய இந்த வில்வ இலைகளை சரியாக 11:30 மணிக்கு மேல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கமாக இருக்கும் பட்சத்தில் பால், தயிர், தேன் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து இந்த வில்வ இலைகளை வைத்து 108 சிவ போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்தில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் நடக்கக்கூடிய அபிஷேகத்தில் கலந்துகொண்டு இந்த வில்வ இலைகளை அர்ச்சனைக்காக தர வேண்டும். இப்படி ஸ்ரீ ராமா என்று எழுதிய இந்த வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அந்த குறிப்பிட்ட நடுநிசி நேரத்தில் அர்ச்சனை செய்வதன் மூலம் அனைத்து விதமான தெய்வங்களின் பரிபூரணமான அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே:கடன் இல்லாத வாழ்க்கை வாழ
முழுமனதோடு சிவபெருமானை நினைத்து இந்த முறையில் மகா சிவராத்திரி நாளன்று அர்ச்சனை செய்பவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.