- Advertisement -

செல்வ கடாட்சம் பெருக

- Advertisement -

மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுபவர்களுக்கு தான் செல்வ கடாட்சம் என்பது ஏற்படும் என்று நம் அனைவருக்கும் தெரியும். செல்வ கடாட்சம் ஏற்பட்டால்தான் வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்து இருக்கும். அதன் மூலம் நிறைவான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட செல்வ கடாசத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ கடாட்சம் பெருக

மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்குரிய வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் பல இருக்கின்றன. அவற்றை குறிப்பாக மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று செய்வதுதான் சிறப்பு. அதிலும் சில முக்கியமான காரியங்களை தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் செய்து வருவதன் மூலம் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வந்து விட்டாலே நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அப்படி மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதற்கு செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் நாம் அனைவருமே வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி தீபமேற்றி வழிபாடு செய்வோம். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவோம். இவ்வாறு கோலம் போட்டு முடித்த பிறகு வீட்டு வாசலில் இருந்து பூஜை அறைக்கு தெய்வங்களை அழைப்பதற்காக ஒரு தண்ணீரை தெளிக்க வேண்டும்.

அந்த தண்ணீரில் சிறிது பன்னீர், ஒரு ஏலக்காயை நன்றாக நுணுக்கி அதன் பொடி, பச்சை கற்பூரம் ஒரு துண்டு அதையும் பொடி செய்து அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக சிறிதளவு ஜவ்வாது, கஸ்தூரி மஞ்சள் தூள் இவை அனைத்தையும் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து வீட்டு வாசலில் இருந்து உள்புறமாக வீட்டு பூஜைகளை வரை தெளித்து வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்குள் வருவார்கள். பிறகு நாம் எப்போதும் போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அன்றைய தினம் இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் மற்றுமொரு தண்ணீரை தெளிக்க வேண்டும். இந்த தண்ணீரில் நாம் ஒரு எண்ணையை கலந்து தெளிக்க வேண்டும். அந்த எண்ணெய் தான் கடுகு எண்ணெய்.
இது பொதுவாக வட இந்தியர்கள் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் என்றும் இந்த எண்ணையை பயன்படுத்தி பல பரிகாரங்களை செய்யலாம் என்றும் கூறி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட எண்ணையை தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் தெளித்து வருவதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் செல்வநிலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:மாசி மாதம் முழுவதும் பணவரவு ஏற்பட

மிகவும் எளிமையான இந்த தண்ணீர் பரிகாரத்தை முழுமனதோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருளால் செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்