- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்பு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்

செல்வ செழிப்பு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு முக்கியமான காரணம் செல்வ நிலை உயர வேண்டும் என்பதுதான் செல்வநிலை உயர்ந்தாலே பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல் இருக்கும். அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் பல விதங்களில் முயற்சி செய்து பணவரவை அதிகரிக்க முயல்கிறார்கள். அந்த முயற்சிகள் அனைத்துமே வெற்றி அடைவது கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடைகிறது. மற்றவர்களுக்கு அது தோல்வியிலேயே முடிவடைகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு சில சமுதாயத்தினர் தங்களுடைய பணவரவுக்கான முயற்சிகளில் வெற்றி அடைந்து மேலும் மேலும் முன்னேறி கொண்டே செல்கிறார்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தில் குறிப்பிட்ட சமுதாயமாக கூறப்படுவது மார்வாடிகள் தான். இவர்களுக்கு பணவரவு என்பது வந்து கொண்டே இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் செய்யக்கூடிய பூஜைகளும், வழிபாட்டு முறைகளும், பரிகாரங்களும் தான். அப்படி மார்வாடிகள் செய்யக்கூடிய ஒரு பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

செல்வ செழிப்பு அதிகரிக்க தானம்

நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் தான் சந்தோஷங்களும் துக்கங்களும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கர்ம வினைகள் அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு துக்கங்கள், துன்பங்கள் அதிகரிக்கும் என்றும் அந்த கர்ம வினைகள் குறைந்தால் இன்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கர்ம வினைகளை குறைப்பதற்கு நாம் செய்யக்கூடிய மிகவும் முக்கியமான ஒன்று தானம் தான். கர்ம வினைகளை குறைப்பதோடு செல்வ செழிப்பை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய தானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒருவருக்கு தேவைப்படும் பொழுது அந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக வேறொருவர் அவருக்கு உதவி செய்வதையே தான தர்மம் என்று கூறுகிறோம். இப்படி தான தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வாயில்லா ஜீவனுக்கு நாம் செய்யக்கூடிய தானமானது நமக்கு பல விதங்களில் நன்மையை தரும் என்றும் கூறப்படுகிறது. அப்படி வாயில்லா ஜீவனான பறவைகளுக்கு செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தானத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கடைகளில் வெள்ளை சோளம் என்று கிடைக்கும். இந்த சோளத்தை வாங்கி வந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் பணம் சம்பாதிப்பவர்கள் இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு வெள்ளை துணியில் தங்களுடைய ஒரு கைப்பிடி அளவு இந்த சோளத்தை எடுத்து அந்த துணியில் வைத்து மூட்டையாக கட்டி, தங்களுடைய தலையணைக்கு கீழே வைத்து உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் பறவைகளுக்கு இதை தானமாக தர வேண்டும். பறவைகள் எங்கள் வீட்டிற்கு வராது என்று கூறுபவர்கள் அந்த சோளத்தை ஊறவைத்து பசு மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும். இப்படி தங்களால் இயன்ற அளவு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ச்சியாக முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்களுடைய செல்வநிலை படிப்படியாக உயர ஆரம்பிக்கும். மேலும் கடன் பிரச்சனை தீரும். பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடன் தீரவும் வீடு கட்டவும் வழிபாடு

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த தானியத்தை தினமும் பறவைகளுக்கும், பசு மாட்டிற்கும் தானமாக தருபவர்களுக்கு கர்ம வினைகள் நீங்குவதோடு செல்வ செழிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்