- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வத்தடை நீக்கும் கருட வழிபாடு

செல்வத்தடை நீக்கும் கருட வழிபாடு

- Advertisement -

பெருமாளின் வாகனமாக திகழக்கூடியவர் கருடர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவரை பெரிய திருவடி என்று வைணவர்கள் கூறும் வழக்கமும் இருக்கிறது. பெருமாளை வழிபாடு செய்வதற்கு முன்பாக கருடரை வழிபாடு செய்தால் தான் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர் ஆக தான் கருடர் திகழ்கிறார். மேலும் பெருமாள் ஆலயத்தில் செல்வ வளத்திற்கு எந்தவித குறையும் இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவராகவும் கருடாழ்வார் திகழ்கிறார். அப்படிப்பட்ட கருடாழ்வாருக்குரிய அற்புதமான ஒரு நாளாக தான் கருட பஞ்சமி திகழ்கிறது. அன்றைய நாளில் கருடரை எந்த முறையில் வழிபாடு செய்தால் செல்வத்தடை நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் மிகவும் சிறப்பு மிகுந்த பல தெய்வங்களுக்கு உரிய நாட்களும் இந்த ஆடி மாதத்தில் வரும். அந்த வகையில் கருடருக்குரிய நாளாக திகழக்கூடிய கருட பஞ்சமி ஆடி மாதத்தில் தான் வரும். ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியை தான் நாம் கருட பஞ்சமி என்று கூறுகிறோம். மற்ற நாட்களில் கருடரை வழிபாடு செய்கிறோமோ இல்லையோ இந்த கருட பஞ்சமி நாளன்று நாம் கருடரை மறவாமல் வழிபாடு செய்யும்பொழுது கருடரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் கஷ்டங்களும் விலகும்.

- Advertisement -

அந்த வகையில் கருட பஞ்சமி என்பது ஜூலை மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கருடருக்கும் பெருமாளுக்கும் துளசி மாலை வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் கருடருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் கொடி மரத்தில் விழுந்து வணங்கிவிட்டு கருடாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி அவருக்கு முன்பாக வாங்கி வந்த இனிப்பு பொருளை வைத்துவிட்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கருடரிடம் மனதார தங்களுடைய செல்வ தடைகள் விலக வேண்டும் என்றும் பணம் தொடர்பான வேண்டுதல்களையும் முன்வைக்க வேண்டும்.

பிறகு நேராக பெருமாளை சென்று தரிசனம் செய்துவிட்டு அவருக்கும் துளசி மாலை கொடுத்து அவரை வழிபாடு செய்து விட்டு கோவிலை வலம் வர வேண்டும். பிறகு கொடி மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு “ஓம் கருடாய நமோ நம” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக கருடனின் மூல மந்திரத்தை 51 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்துவிட்டு அங்கு கொடுத்த துளசி இலைகளை பிரசாதமாக உண்டு வீடு திரும்ப வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கருடரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகும். குறிப்பாக பணம் தொடர்பான தடைகள் விலகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கருட பஞ்சமி வழிபாடு

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பு மிகுந்த நாட்கள் என்று சில நாட்கள் இருக்கும். அந்த நாட்களில் அந்த தெய்வத்தை வழிபாடு செய்யும் பொழுது மற்ற நாட்களில் செய்த வழிபாட்டை விட அதிக அளவு பலன் கிடைக்கும். அந்த வகையில் கருட பஞ்சமி நாளன்று கருடரை வழிபாடு செய்து அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்