- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க லட்சுமி வராகி வழிபாடு

செல்வ வளம் அதிகரிக்க லட்சுமி வராகி வழிபாடு

- Advertisement -

பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவள் மகாலட்சுமி என்று நாம் அனைவருக்குமே தெரியும் அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கும் அதை சிறப்பான முறையில் கையாளுவதற்கும் பல வழி முறைகள் இருந்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அதை நம்மால் பின்பற்ற முடியும். மேலும் பணம் தொடர்பான பல பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு லட்சுமி வாராஹி அருள் பரிபூரணமாக வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் லட்சுமி வாராகியை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

லட்சுமி வராகி வழிபாடு

மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலம் பணவரவு உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்வதற்கு நாம் லட்சுமிவாராகியை வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி வாராஹி முழு மனதோடு நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதோடு பண வரவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த லட்சுமி வாராகியை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஏதாவது ஒரு சுபமுகூர்த்த நாளாக பார்த்து தேர்வு செய்து செய்ய ஆரம்பிக்க வேண்டும். அது வளர்பிறையாக இருந்தால் மிகவும் சிறப்பு. தொடர்ச்சியாக 27 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக இருக்கக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம்.

வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். சிலை இருந்தாலும் அந்த சிலைக்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். படமோ சிலையோ இல்லை என்பவர்கள் வாராகி அம்மனை நினைத்து ஒரே ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்திரி போட்டு தீபம் ஏற்றி அந்த தீபத்தில் வாராகி அம்மன் இருப்பது போல் பாவித்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அந்த வாராஹி அம்மனின் படத்திற்கோ அல்லது அந்த விளக்கிற்கோ தாமரை அல்லது செவ்வரளி பூக்களை சூட்ட வேண்டும்.

- Advertisement -

நெய்வேத்தியமாக அத்திப்பழத்தை வைக்க வேண்டும். இந்த அத்திப்பழம் பழமாக இருந்தாலும் வைக்கலாம் உலர் பலமாக இருந்தாலும் வைக்கலாம். பிறகு பின்வரும் இந்த லட்சுமி வாராகியின் மூல மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பிறகு நமக்கு எவ்வளவு பணம் கிடைத்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீருமோ அவ்வளவு தொகையும் கிடைக்க வேண்டும் என்று முழுமனதோடு வாராகி அம்மனிடம் உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 27 நாட்கள் நாம் லட்சுமிவாராகியை நினைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதன் மூலம் லட்சுமி வாராகி அருளால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்குரிய பணவரவு உண்டாகும்.

மந்திரம்

“ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் லக்ஷ்மி வாராஹியை நமஹ |”

இதையும் படிக்கலாமே:செல்வ நிலை உயர மாசி வளர்பிறை அஷ்டமி வழிபாடு

முழு நம்பிக்கையுடன் லட்சுமி வாராகியை மனதார நினைத்துக் கொண்டு இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்குரிய பணமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்