- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் பெருக பிரியாணி இலை பரிகாரம்

செல்வ வளம் பெருக பிரியாணி இலை பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் சிறப்புடன் வாழ வேண்டும் என்றால் தன்னுடைய முயற்சியோடு கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைத்தும் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் சில தெய்வீக வழிபாட்டையும், தாந்திர பரிகாரத்தையும் மேற்கொள்ள வேண்டும். இதன் அருளால் அவர் செய்த முயற்சிகள் வெற்றியடைந்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பிரியாணி இலையை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் செல்வம் வளம் பெருகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

தெய்வம்சம் பொருந்திய பொருட்கள் என்று பல பொருட்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயாரின் விருப்பமான பொருட்கள் என்று கணக்கில் அடங்காத பொருட்கள் இருக்கின்றன. அந்த மாதிரி கணக்கில் அடங்காத பொருட்களுள் மிகவும் முக்கியமான பொருட்களாக திகழ்வது வாசனை நிறைந்த பொருட்கள். அதிலும் குறிப்பாக ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை போன்ற பொருட்கள் அனைத்தும் மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான பொருட்களாக திகழ்கிறது. இந்த பொருட்களை வைத்து நாம் வழிபாடும் பரிகாரமும் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இன்று செல்வ வளம் பெறுவதற்கு பிரியாணி இலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது கிழியாத நல்ல பிரியாணி இலையாக பார்த்து மூன்று இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் நீல நிற ஸ்கெட்ச் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று அங்கு அமர்ந்து ஒவ்வொரு இலையிலும் மகாலட்சுமியின் பீஜ மந்திரமான “ஸ்ரீம்” என்னும் மந்திரத்தை எழுத வேண்டும்.

இவ்வாறு எழுதி முடித்த பிறகு எப்பொழுதும் போல் பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு இந்த மூன்று இலைகளையும் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து மனதார வழிபட்டு விட்டு பிறகு இந்த இலைகளை பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். பிறகு நாம் உபயோகப்படுத்தும் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் பீஜ மந்திரம் நாம் வைத்திருக்கும் பணம் நகையுடன் சேர்வதால் பணமும் நகையும் பல மடங்கு அதிகரிக்கும். இலை கிழிந்து போகும் சூழ்நிலை வரும்பொழுது மட்டும் அந்த இலையை கால்படாத இடத்தில் போட்டு விட்டு மறுபடியும் வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதே முறையில் பிரியாணி இலையில் எழுதி வந்து பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 18-05-2024 வாசவி ஜெயந்தி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ நிலை உயரும்.

சற்று முன்