- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு

செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்து விட்டு தொடங்கினோம் என்றால் அந்த செயலில் எந்தவித தடைகளும் ஏற்படாது மேலும் அந்த செயலில் வெற்றியை நம்மால் பெற முடியும். காரிய தடையை நீக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை திங்கட்கிழமை அன்று எப்படி தீபமேற்றி வழிபட்டால் செல்வ வளம் அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் பெருக வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பான முறையில் இருக்கும். அப்படி செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு தங்களுடைய கடின உழைப்பை பயன்படுத்துவோம். அந்த கடின உழைப்பு வெற்றி பெற வேண்டும் என்றாலும் செல்வம் நம்மிடம் சேர வேண்டும் என்றாலும் அதற்கு தெய்வத்தின் அருள் வேண்டும். அந்த வகையில் செல்வ வளம் அதிகரிப்பதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 11 திங்கட்கிழமை இந்த வழிபாட்டை நாம் செய்து விட்டோம் என்றால் விநாயகப் பெருமானின் அருளால் செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும். இந்த வழிபாட்டை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலம் எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு ஒரே ஒரு அருகம்புல்லை மட்டுமாவது சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

பிறகு அவருக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள். பஞ்சு திரியை எடுத்து அதனுடன் ஒரே ஒரு வெட்டிவேரையும் சேர்த்து திரியாக திரித்து அதை அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தில் மூன்று எண்ணிக்கையில் குன்றின் மணியை போட வேண்டும்.

- Advertisement -

குன்றின்மணி என்பது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடியது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு செல்வ வளத்தை அதிகரிப்பதற்குரிய சக்தியும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானுக்கு உகந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குன்றின்மணியை விநாயகப் பெருமானுக்காக நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் போடுவதன் மூலம் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. இந்த தீபத்தை ஏற்றிய பிறகு விநாயகப் பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும், பணம் வந்து சேர வேண்டும் என்று பணம் தொடர்பான வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் முன்வைக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக 11 திங்கட்கிழமை நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது விநாயகப் பெருமானின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். ஒரு வாரம் உபயோகப்படுத்திய குன்றின் மணியை அடுத்த வாரம் உபயோகப்படுத்த கூடாது புதிதாக போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். பழைய குன்றின்மணியை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:வருமானத்தை பெருக்கும் அஷ்டமி பரிகாரம்
செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய இந்த தீபத்தை விநாயகப் பெருமானை முழுமனதோடு நம்பி திங்கட்கிழமை தோறும் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வறுமை முற்றிலும் நீங்கும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்