- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் பெருகி கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு.

செல்வ வளம் பெருகி கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு.

- Advertisement -

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவர் தான் அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராகவும் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அஷ்ட லட்சுமிகளுக்கே செல்வத்தை வாரி வழங்கியவர் நம்முடைய கஷ்டம் தீர்வதற்கு நமக்கு செல்வத்தை தர மாட்டாரா? அப்படி அவர் தருவதற்கு அவதரித்த உருவம் தான் சொர்ண ஆகர்ஷண பைரவர். காலபைரவரின் மற்றொரு அம்சமாக திகழக்கூடிய இந்த சொர்ண ஆகர்ஷண பைரவரை நாம் முழு மனதோடு வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான செல்வங்களும் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய கால பைரவரின் தேய்பிறை அஷ்டமி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். லக்ஷ்மி குபேரரையும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும் முழுமனதோடு இன்றைய நாளில் நாம் நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்வில் பணம் தொடர்பான எந்த கவலையும் இல்லாமல் வாழ முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியான இன்று இரவு 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். நாளை காலை 9 மணி வரை அஷ்டமி திதி இருக்கிறது என்பதாலும் காலபைரவருக்கு உகந்த நேரமாக நள்ளிரவு தான் திகழ்கிறது என்பதாலும் முடிந்த அளவிற்கு இரவு நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு 8 ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். 8 என்பது பைரவருக்கு உகந்த எண்ணாக கருதப்படுகிறது மேலும் இது அஷ்டலட்சுமிகளையும் குறிக்கும். ஒரு ரூபாய் நாணயம் என்பது மகாலட்சுமிக்குரியதாக கருதப்படுகிறது. அதனால் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதற்கு இந்த எட்டு ஒரு ரூபாய் நாணயம் இருந்தாலே போதும்.

வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எட்டு ஒரு ரூபாய் நாணயத்தை வலது கையில் வைத்துக் கொண்டு முழு மனதோடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும் அதே சமயம் லட்சுமி குபேரரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய பணம் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை கூறலாம்.

- Advertisement -

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதால் மந்திரத்தை எத்தனை முறை கூறுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளாமல் முழுக்க முழுக்க சொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டுமே மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்க கூடிய அந்த எட்டு ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரிலோ அல்லது ஒரு கவரிலோ அல்லது ஒரு பச்சை நிற துணியிலோ முடிந்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அதை எக்காரணத்திற்கு கொண்டும் செலவு செய்யக்கூடாது.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ”

இதையும் படிக்கலாமே:பணம் சேர அரிசி படி

மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டை முழுமனதோடு இன்று இரவுக்குள் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் அருள் கிடைக்கும் அதன் மூலம் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்